Tamil Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
நேபாள விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இதுவரை 16 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 6 பேரின் உடல்களை பொலிஸார் மற்றும் இராணுவ அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
மலை உச்சியில் மோதிய பிறகு, விமானத்தின் பாகங்கள் சுமார் 100 மீட்டர் சுற்றளவில் பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விமானம் 14,500 அடி உயரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சடலங்களை மீட்பதற்காக 15 நேபாள இராணுவ வீரர்கள் கொண்ட குழு அந்த இடத்திற்கு அருகில் இறக்கப்பட்டதாக நேபாள இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
நேபாளத்தின் பொக்காராவில் இருந்து ஜோம் சோமுக்கு நேற்றுக் காலை 9.55 மணிக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் மாயமானது. அந்த விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானி யர்கள் உட்பட மொத்தம் 22 பேர் பயணம் செய்துள்ளனர். காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், மாயமான விமானம் நேபாளத்தின் மஸ்டாங் அருகே கோவாங் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேபாள டெலிகொம் விமானத்தின் கப்டன் பிரபாகர் கிமிரின் செல்போனை குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (ஜிபிஎஸ்) நெட்வொர்க் மூலம் கண்டறிந்த பிறகு விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவருகிறது.
kidhors – Tamil Kids News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.