Most Plastic Waste Companies சிறுவர்களுக்கான உலக செய்திகள்
தற்காலத்தில் பாரிய சுற்றாடல் மாசுபாடாக காணப்படுவது பிளாஸ்ட்ரிக்ட் பொருட்களின் பயன்பாடு காணப்படுகின்றது.
அந்தவகையில் Break Free From Plastic என்ற அமைப்பு நடத்திய புதிய ஆய்வில் Coca-Cola, PepsiCo, Nestlé, மற்றும் Danone போன்ற நிறுவனங்கள் உலகளாவிய பிளாஸ்டிக் மாசு ஏற்படுத்துவதில் முதன்மையானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதாவது கடந்த 2018 முதல் 2022 வரை, 1,00,000 க்கும் மேற்பட்ட நபர்கள் 1.8 மில்லியன் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தனர், அவற்றில் அதிகமாக 56 முக்கியமான நிறுவனங்களுடன் தொடர்புடையது.
![அதிர்ச்சியை ஏற்படுத்திய உலகில் அதிக பிளாஸ்ரிக் கழிவுகளை வெளியிடும் நிறுவனங்கள் Most Plastic Waste Companies 1 Most Plastic Waste Companies சிறுவர்களுக்கான உலக செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2024/10/Untitled-design-20.jpg)
Coca-Cola தனியாக 11% பிளாஸ்டிக் கழிவுகளுக்குப் பொறுப்பாக இருந்தது. பிளாஸ்டிக் கழிவுகள் விலங்குகளை பாதிக்கின்றன, காலநிலை மாற்றத்தை உருவாக்குகின்றன, மேலும் 9% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. பிளாஸ்டிக் உற்பத்தியை குறைப்பது மிக முக்கியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் குழு இந்த பிரச்சனைக்கு தீர்வுகளை உருவாக்கி, பிளாஸ்டிக் உற்பத்திக்கு உலகளாவிய வரம்பு குறித்து கலந்துரையாடி வருகிறது.
Kidhours – Most Plastic Waste Companies
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.