Most billionaires in the world பொது அறிவு செய்திகள்
ஒரு நாடு எப்படி முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை அந்த நாட்டில் உள்ள பணக்காரர்களின் எண்ணிக்கையை பொறுத்தே அமையும்.
அதிக பணக்காரர்கள் இருந்தால் அதிக வணிகம் இருக்கும் இதனால் அந்த நாடுகளில் அதிக பொருளாதார வளர்ச்சி ஏற்படும். இந்த பட்டியலில் உள்ள நாடுகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
1.அமெரிக்கா
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நாடு வல்லரசு நாடான அமெரிக்கா ஆகும். இங்கு 22 மில்லியன் பணக்காரர்கள் வசிக்கிறார்கள். இது உலகில் உள்ள மொத்த பணக்காரர்களின் சதவீதத்தில் 39.1% ஆகும்.
2.சீனா
இரண்டாவது இடத்தில் இருக்கும் நாடு உலகின் தொழிற்சாலை என்று அழைக்கப்படும் சீனா. இங்கு வசிக்கும் பணக்காரர்கள் உலகளவில் ஒப்பேடு செய்தால் 9.4% ஆகும்.
3.ஜப்பான்
மூன்றாவது நாடாக இருப்பது தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு பெயர் போன ஜப்பான் ஆகும். இங்கு வசிக்கும் பணக்காரர்கள் சதவீதம் 6.6% ஆகும்
4.ஜெர்மனி
பொறியியல் மற்றும் கட்டமைப்புகளுக்கு பெயர் போன ஜெர்மனி இந்த பட்டியலில் நான்காவது நாடாக உள்ளது. இங்கு 5.3% பணக்காரர்கள் வசிக்கிறார்கள்.
5.uk
ஐந்தாவது இடத்தில இருக்கும் நாடு ஒரு காலத்தில் உலகையே ஆண்ட UK ஆகும். இங்கு வசிக்கும் பணக்காரர்களின் எண்ணிக்கை 4.4% ஆகும்.
6.பிரான்ஸ்
கலை மற்றும் நறுமணம் வீசும் சென்ட் போன்றவற்றிற்கு பெயர் போன பிரான்ஸ் ஆறாம் இடம் பிடித்துள்ளது. இங்கு 4.4% சதவீத பணக்காரர்கள் உள்ளனர்.
7.இத்தாலி
ஏழாவது இடத்தில் இருக்கும் நாடு சொகுசு ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு பெயர்போன இத்தாலி ஆகும். இங்கு உலகில் வாழும் பணக்காரர்களில் 2.6% சதவீதம் வசிக்கிறார்கள்.
Kidhours – Most billionaires in the world
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.