Tamil Kids News Mosquito Species சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அணு ஆயுதம், பீரங்கிகள், ராக்கெட், துப்பாக்கிகள் என்று எத்தனையோ சர்வ வல்லமை படைத்த ஆயுதங்களை கொண்டுள்ள மனிதர்களிடம் கொசுக்களை முற்றாக ஒழிக்க கூடிய ஒரு ஆயுதம் இல்லை என்பது தான் வேதனையான விஷயம்.
கொசுவை விரட்டுவதற்காக வீட்டில் கொசுவர்த்தி சுருள், லிக்விட், கொசு வலை என எதை, எதையோ பயன்படுத்தினாலும் எல்லாவற்றையும் மீறி வந்து நறுக்கென்று கடித்து விட்டு போகும் கொசு நம்மை மிகுந்த எரிச்சலுக்கு உள்ளாக்கி விடும்.
குறிப்பாக ரத்தத்தை உறிஞ்சி கொள்வதோடு மட்டுமல்லாமல் டெங்கு, மலேரியா போன்ற உயிர்கொல்லி நோய்களையும் கொசுக்கள் பரப்பி விட்டு செல்கின்றன. ஆகவே கொசுவை கண்டு அஞ்சாதவர்கள் எவரும் இல்லை.
உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் என்னதான் ஊரெல்லாம் புகைமூட்டம் போட்டு வைத்தாலும், கொசு வளர்ச்சிக்கு சாத்தியமுள்ள தண்ணீர் தேங்குதலை முறியடித்தாலும் எப்படியாவது படை எடுத்து வந்து தாக்குகின்றன கொசுக்கள்.
கடித்து துன்புறுத்துவதோடு மட்டுமல்லாமல் நாள் முழுவதும் ஓடியாடி, ஓய்ந்து போய் அமைதியாக தூங்க விரும்பும் நம்முடைய காதுகளுக்கு அருகே ரீங்கார ஒலி எழுப்பி அன்பு தொல்லை கொடுப்பதில் கொசுக்களுக்கு நிகர் வேறெதுவும் இல்லை.
இப்படி நினைத்தாலே திகிலூட்டும் அளவுக்கு மனித வாழ்வுக்கு தொல்லைகளை அழித்து வரும் கொசுக்கள் இந்த உலகில் ஏதோ ஒரு பகுதியில் இல்லவே இல்லை என்ற செய்தி தெரிந்தால் நீங்கள் எவ்வளவு ஆச்சரியப்படுவீர்கள்.
உண்மைதான், வடக்கு அட்லாண்டிக் பகுதியில் உள்ள நாடு ஒன்றில் கொசு என்பதே கிடையாதாம். உலக அளவில் 3000க்கும் மேற்பட்ட கொசு வகைகள் உள்ளன என்றாலும் கூட எந்த வகையைச் சேர்ந்த கொசுவும் இந்த நாட்டில் உயிர் பிழைத்து வாழ முடியாதாம்.
இந்த நாட்டில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? ஏன் கொசு வாழ முடியவில்லை என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
வடக்கு அட்லாண்டிக் பகுதியில் உள்ள ஐஸ்லாந்து நாட்டில் கொசுக்கள் மட்டுமல்ல பாம்புகளும் கிடையாது. ஏதோ சில ஊர்வன உயிரினங்கள் இங்கு உண்டு என்றாலும் கூட அவை ஒன்று கூட மனித உயிருக்கு ஆபத்தானவை கிடையாது.
இங்கு உள்ள மிகுதியான குளிர்ச்சி தான் கொசுக்கள் மற்றும் பாம்புகள் வாழ்வதற்கான உயிர் சூழல் இல்லாமல் செய்கிறது என்று பரவலாக நம்பப்படுகிறது.
ஆர்டிக் பிரதேசத்தில் உள்ள கடும் குளிரையும் கூட தாக்குப்பிடித்து கொசுக்கள் வளரக்கூடியது என்றாலும் ஐஸ்லாந்தில் உள்ள குளிருக்கு அவைகளால் தாக்கு பிடிக்க முடிவதில்லையாம்.
வானம் மும்மாரி பொழிவதைப் போல ஐஸ்லாந்து நாட்டில் ஆண்டுக்கு மூன்று முறை ஐஸ் உறையும் நிகழ்வு நடக்கிறது.
குறிப்பாக ஏரிகள் நீர்நிலைகள் போன்றவை ஐஸ் கட்டிகளாக மாறிவிடுகின்றன. இதுதான் கொசுவின் இனப்பெருக்கத்தை தடுத்து அவை முற்றாக இல்லாமல் போனதற்கான காரணமாகும்.
ஏனென்றால் இனப்பெருக்கத்தில் கொசுக்கள் முட்டைகளை வெளியிடும்போது, அவை பருவமடைந்து குஞ்சு பொறிப்பதற்கு சில காலம் தேவைப்படும். அதற்குள்ளாக நீர்நிலைகள் அனைத்தும் ஐஸ்கட்டிகளாக மாறிவிடுகின்றன.
kidhours – Tamil Kids News Mosquito Species , Tamil Kids News Mosquito Species
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.