Tamil Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்னர் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சிய மையமான நாசா.
இதற்காக விண்ணப்பித்த 12,000 பேரிலிருந்து நாசா 10 விண்வெளி வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளது.
திங்களன்று ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்திற்கு அருகிலுள்ள எலிங்டன் ஃபீல்டில் நடந்த நிகழ்வின்போது நாசா நிர்வாகி பில் நெல்சன் 10 பேரையும் அறிமுகப்படுத்தினார்.
We’re honored to announce the 2021 class of NASA Astronaut Candidates! Get to know them: https://t.co/NbU6BlaTQK.
All 10 of these individuals are taking YOUR #askNASA questions, right here on this thread. What do you want to ask them about becoming a NASA Astronaut? pic.twitter.com/byeGl8yphh
— NASA Astronauts (@NASA_Astronauts) December 6, 2021
அப்போது பேசிய நெல்சன், “ஆர்ட்டெமிஸ் தலைமுறையைச் சேர்ந்த 10 விண்வெளி வீரர்களை வரவேற்கிறோம்” என்றார்.
அடுத்த வருடம் (2022) ஜனவரி மாதத்திலிருந்து 10 பேர் நாசாவின் ஜான்சன் ஸ்பேஸ் சென்டரில் பணிக்காகப் பதிவு செய்து இரண்டு வருட பயிற்சியைத் தொடங்க இருக்கிறார்கள்.
பயிற்சி முடிந்ததும், நாசாவின் ஓரியன் விண்கலம் மற்றும் விண்வெளி ஏவுகணை அமைப்பு ராக்கெட்டில் சந்திரன் உள்ளிட்ட இடங்களுக்கு விண்வெளிப் பயணங்களை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kidhours – Tamil Kids News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.