Friday, January 10, 2025
Homeசிறுவர் செய்திகள்குரங்கம்மை நோயை உலக சுகாதார நெருக்கடியாக WHO அறிவித்துள்ளது. Tamil Kids news...

குரங்கம்மை நோயை உலக சுகாதார நெருக்கடியாக WHO அறிவித்துள்ளது. Tamil Kids news Monkeypox # World Best Tamil Kids

- Advertisement -

Tamil Kids news Monkeypox சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

குரங்கம்மை நோயை உலக பொதுச் சுகாதார நெருக்கடி நிலைமையாக உலக சுகாதார ஸ்தாபனம் அதிகாரபூர்வமாக இன்றைய தினம் அறிவித்துள்ளது.

உலக அளவில் கவனம் கொள்ளப்பட வேண்டிய ஒரு பொது சுகாதார நெருக்கடி நிலைமையாக, சர்வதேச அளவில் பரவியுள்ள குரங்கம்மை பிரதிபலிக்கிறது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறியுள்ளார்.

- Advertisement -

 

- Advertisement -
Tamil Kids news Monkeypox சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Kids news Monkeypox சிறுவர்களுக்கான உலக செய்திகள்

 

இதுவரை 75 நாடுகளில் பரவி, 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ஒரு நோய்த்தொற்று பரவலானது, உலக அளவில் கவனம் கொள்ளப்பட வேண்டிய ஒரு பொது சுகாதார நெருக்கடி என்று முடிவு செய்வதற்கு 5 விடயங்கள் பரிசீலிக்கப்படுகின்றன என டெட்ராஸ் கூறியுள்ளார்.

இதன்படி, நாடுகள் அளித்துள்ள தகவல்களின்படி, இந்த குரங்கு காய்ச்சலானது இதுவரை கண்டிராத வகையில், பல நாடுகளுக்கும் வேகமுடன் பரவி வருகின்றன என தெரிய வந்துள்ளது .

சர்வதேச சுகாதார விதிமுறைகளின் கீழ், பொது சுகாதார அவசரநிலையை அறிவிப்பதற்கான 3 அளவுகோல்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அவசரகால குழு கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டாத நிலையில், அதன் அறிவுரை ஏற்கப்படுகிறது.

அறிவியல் கோட்பாடுகள், சான்றுகள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்கள் தற்போது போதிய அளவில் இல்லை. பல அறியப்படாத விடயங்கள் நம்மிடம் விட்டு செல்லப்பட்டு உள்ளன.

மனித ஆரோக்கியத்திற்கான ஆபத்து, சர்வதேச பரவல் மற்றும் சர்வதேச போக்குவரத்தில் குறுக்கிடுவதற்கான சாத்தியம் ஆகியவை பரிசீலனையில் எடுத்து கொள்ளப்பட்டு உள்ளன.

குரங்கம்மையின் ஆபத்து, உலக அளவில் மற்றும் அனைத்து பகுதிகளிலும் மித அளவில் உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இதனால் ஏற்படும் ஆபத்து அதிகரித்து காணப்படுகிறது என ஆய்வு செய்யப்பட்டு உள்ளது என்று டெட்ராஸ் கூறியுள்ளார்.

இந்த தருணத்தில் சர்வதேச போக்குவரத்தில் குறுக்கிடுவதற்கான தற்போது தொடர்ந்து குறைவாக உள்ளபோதும், உலக அளவில் நோய் பாதிப்பு பரவுவதற்கான ஆபத்தும் தெளிவாக காணப்படுகிறது.

புதிய வழிகளிலான பரிமாற்றத்தினால், ஒரு பரவலானது உலகம் முழுவதும் விரைவாக பரவி வருகிறது. அதனை பற்றி சிறிதளவே நமக்கு புரிந்துள்ளது. இந்த பரவலானது, சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகளில் உள்ள அளவுகோல்களை பூர்த்தி செய்கிறது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

 

kidhours – Tamil Kids news Monkeypox

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.