Missing a Train சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பெர்முடா டிரையாங்கிள் உலகின் மிக மர்மமான இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த இடத்தில் பறந்த சில விமானங்கள் பயணிகளுடன் காணாமல் போன சம்பவங்கள் இன்றளவும் உலக அளவில் விவாதிக்கப்படுகின்றன. ஆனால் பெர்முடா டிரையாங்கிளில் நடந்த மற்றொரு மர்ம சம்பவம் உள்ளது.104 பயணிகளுடன் சென்ற ரயில் காணாமல் போய்விட்டது. ஆனால் அதிலிருந்த 2 பயணிகள் மட்டும் உயிர் தப்பியுள்ளனர். பெர்முடா டிரையாங்கிளின் மர்மத்தை இது மேலும் வலுக்க செய்கிறது.
கடந்த 1911 ஆம் ஆண்டு இத்தாலியின் தலைநகர் ரோமில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட “ஜெனெட்டி” என்ற ரயில் காணாமல் போய் 100 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. அந்த ரயிலில் இருந்து கீழே விழுந்த இருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை மேற்கொண்டனர், ஆனால் அந்த சம்பவத்தின் மர்மத்தை கண்டறிய முடியவில்லை.
ந்த ரயில் காணாமல் போனதை அடுத்து அதில் பயணித்த 2 பயணிகள் மட்டும் சுரங்கப்பாதைக்கு வெளியே கிடந்துள்ளனர். அதில் ஒரு பயணி சுய நினைவு இன்றி தவித்துள்ளார். மற்றொரு பயணி கூறுகையில், ரயில் சுரங்கப்பாதைக்கு அருகே சென்ற போது அதிலிருந்து புகை வெளியேறியது என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பயணிகள் இருவரும் ரயிலில் இருந்து குதித்துள்ளனர். அப்போது அவர்கள் கண் முன் சுரங்கப்பாதைக்குள் சென்ற ரயில் மீண்டும் வரவே இல்லை.
இத்தாலியின் ஜெனெட்டி ரயில்வே நிறுவனம் கடந்த 1911-ல் புதிய ரயிலை உருவாக்கியது. அதன் கோச்சுகள் முதல் இன்ஜின் வரை அனைத்தும் புதியதாக இருந்தது. அதன் சோதனை ஓட்டத்தின்போது மக்கள் இலவசமாக ரயிலில் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக 100-க்கும் மேற்பட்ட பயணிகள் அதில் பயணித்துள்ளனர். அப்போது சுரங்கப்பாதைக்குள் சென்ற ரயில் மீண்டும் வெளியே வரவில்லை.இந்த ரயில் தொடர்பாக பல்வேறு வகையான வதந்திகள் பரவி வந்தன.
இந்த ரயில் காலப்போக்கில் பயணித்து மறைந்து வேறு உலகத்தை அடைந்ததாக சிலர் கூறுகின்றனர். இருப்பினும் இதுவரை காணாமல் போன ரயில் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதே நேரத்தில் சில ஆண்டுகளுக்கு பிறகு, இந்த ரயிலின் சில பாகங்கள் ரஷ்யா, உக்ரைன், ஜெர்மனியில் காணப்பட்டதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் அவற்றிற்கான ஆதாரம் எதுவுமில்லை.
Kidhours – Missing a Train
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.