Missile Test சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை மேற்கொண்ட புகைப்படங்களை வடகொரியா வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா-தென்கொரியா இடையே கடந்த 13-ஆம் திகதியில் இருந்து மிகப்பெரிய அளவிலான கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை எச்சரிக்கும் வகையில் வட கொரியா நேற்று Hwasong-17 எனப்படும் வடகொரியாவின் மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை மேற்கொண்டது.
அந்த புகைப்படங்களை வடகொரியா அரசு ஊடகம் தற்போது வெளியிட்டுள்ளது.
மேலும் ICBM ஏவுகணை சோதனையை அதிபர் கிம் ஜாங் உன் தனது மகளுடன் நேரில் பார்வையிட்டார்.
Kidhours – Missile Test
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.