Tamil Kids News Missile சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதன்காரணமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
ஆனாலும் கடும் பொருளாதார நெருக்கடி, கொரோனா தொற்று பரவல் ஆகியவற்றுக்கு இடையேயும் இந்த ஏவுகணை சோதனையை அந்த நாடு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே நாளில் 8 குறுகிய தொலைவு ‘பாலிஸ்டிக்’ ரக ஏவுகணைகளை ஏவி சோதித்துள்ளது. தலைநகர் பியாங்யாங் அருகேயுள்ள சுனான் பகுதியில் இருந்து 35 நிமிடங்களில் இந்த ஏவுகணைகள் ஏவி சோதிக்கப்பட்டுள்ளதாக தென் கொரிய கூட்டுப்படைத்தலைவர்கள் தெரிவித்தனர்.
ஏவுகணை சோதனைகளையொட்டி அண்டை நாடுகளான தென்கொரியாவும், ஜப்பானும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன.
kidhours – Tamil Kids News Missile
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.