Miserable Children சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகில் மில்லியன் கணக்கான பிள்ளைகள் படிப்பைக் கைவிட்டு விட்டு வேலைக்குச் செல்வதாக தெரியவந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவன ஊழியர் அமைப்பு இது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளது.
அந்தப் போக்கு, அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.பாலியல் ரீதியாக அதிகளவு பிள்ளைகள் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் அமைப்பின் தலைமை இயக்குநர் கில்பர்ட் ஹௌஞ்போ (Gilbert Houngbo) தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 நோய்ப் பரவல், பணவீக்கம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகிய பல்வேறு காரணங்களால் பிள்ளைகள் பாடசாலையைப் பாதியிலே விட்டுவிட்டு வேலைக்குச் செல்லும் நிலை உருவாகியுள்ளதாக அவர் கூறினார்.
உடனடியாக அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமற்போனால், நிலைமை மேலும் சிக்கலாகுமெனவும் ஹௌங்போ கூறினார்.
Kidhours – Miserable Children
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.