Miraculous Event in the Sky சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அதிசயத்தக்கவகையில் பாரிய வால் நட்சத்திரம் ஒன்று 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு இந்திய வான் பகுதியில் கடந்து செல்ல உள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2024 ஆண்டின் செப்டம்பர் 28-ம் திகதி இந்த வால் நட்சத்திரம், சூரியனின் மிக அருகே சென்றது. இதன்பின் அதன் பயணம் திசைதிரும்பி உள்ளது.
குறித்த வால் நட்சத்திரத்தினை பூமியிலிருந்து நாம் காண முடியும். அடுத்த 80,000 ஆண்டுகளுக்கு இதனை நாம் காண முடியாது. அதனால், இது மிக அரிய நிகழ்வாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர் .
குறித்த வால் நட்சத்திரத்தினை சிறிய தொலைநோக்கிகள் அல்லது பைனாகுலர்கள் கொண்டு பார்க்கும்போது, நீண்ட வால் போன்ற பகுதியை நாம் தெளிவாக பார்க்க முடியும்.
காலையில் சூரிய உதயத்திற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்பு கிழக்கு திசையின் கீழ் பகுதியில் இதனை பார்க்கலாம் என வானியலாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Kidhours – Miraculous Event in the Sky
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.