Massive earthquake 126 dead பொது அறிவு செய்திகள்
ஆசிய நாடான திபெத்தை உலுக்கியுள்ள பாரிய பூகம்பத்தினால் 126 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 450 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் மீட்பு பணிக்காக 15000 மீட்பு பணியாளர்களை சீனா திபெத்திற்கு அனுப்பியுள்ளது.
அதாவது எவரெஸ்ட் சிகரத்தின் அடியிலிருந்து 50 மைல் தொலைவில் உள்ள பகுதியை தாக்கிய பூகம்பம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை அழித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது அங்கு நிலவிவரும் கடும் குளிர் காரணத்தினால் மீட்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன என ஊடகங்கள் தெரிவிக்கின்றன
இந்த பகுதி புவி நடுக்க வலயத்தினுள் காணப்படுவதனால் இங்கு பூகம்பங்கள் என்பது சாதாரணவிடயமாக இருப்பினும் செவ்வாய்கிழமை பூகம்பம் சமீபத்தைய சீன வரலாற்றில் மிக மோசமான ஒன்று. ரிச்டர் அளவையில் 7.1 ஆக பதிவாகியுள்ள இந்த பூகம்பத்தின் அதிர்வுகள் நேபாளம் இந்தியாவிலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திபெத்தினை கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் சீனா வைத்துள்ளதனால் அங்கு இணையசேவைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன, இதனால் குறித்த சம்பவம் தொடர்பாக சீன ஊடகங்களின் மூலமே அறிந்து கொள்ளவேண்டிய நிலை காணப்படுவதாக ஏனைய சர்வதேச ஊடகங்கள் (பிபிசி) தெரிவிக்கின்றன.
மீட்பு பணியாளர்களிற்கு உதவுவதற்காக சீன விமானப்படையின் விமானங்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன, ஆளில்லா விமானங்களையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.
30,000 மக்கள் அந்த பகுதியில் இடம்பெயர்ந்துள்ளதுடன் 35000 கட்டிடங்கள் தரைமட்டமாகியிருக்கலாம் என சீன அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.
Kidhours – Massive earthquake 126 dead
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.