Saturday, January 18, 2025
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புசந்திரனில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம் Massive Change in Moon

சந்திரனில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம் Massive Change in Moon

- Advertisement -

Massive Change in Moon சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அதாவது நாளைய தினம் சுப்பர் புளூ மூன் (பெரும் நீல நிலவு) எனும் அரிய நிகழ்வு இடம்பெறவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

சுப்பர் மூன் தினத்தில், சந்திரனானது வழக்கமான பௌர்ணமி தினங்களில் தென்படுவதைவிட 14 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் அதிக பிரகாசத்துடனும் தென்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய அபூர்வ வானியல் நிகழ்வை உலகம் முழுவதும் பார்க்க முடியும் என்பதால் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.பொதுவாக, மாதத்துக்கு ஒரு தடவை பௌர்ணமி தோன்றும். அதாவது, ஒரு வருடத்தில் 12 பௌர்ணமி தினங்கள்.

- Advertisement -

சந்திரன் ஒரு தடவை பூமியை சுற்றி வருவதற்கு 29.5 நாட்கள் செல்லும். இதன்படி, 12 தடவைகள் பௌர்ணமி (முழு நிலவு) ஏற்படுவதற்கு 354 நாட்கள் செல்லும்.ஆனால், நாம் பயன்படுத்தும் நாட்காட்டியில் 365 தினங்கள் உள்ளன. எனவே ஒரு வருடத்தில் 12 பௌர்ணமிகளுக்கு உரிய காலத்தைவிட மேலும் சுமார் 11 நாட்கள் எஞ்சியிருக்கும்.

- Advertisement -

இதனால் ஏறத்தாழ 3 வருடங்களுக்கு ஒரு தடவை, ஒரே மாதத்தில் இரு பௌர்ணமிகள் ஏற்படலாம். இதுவே புளூ மூன் (நீல நிலவு) என அழைக்கப்படுகிறது.நீல நிலவு என்று அழைக்கப்படுவதால் நிலா நீல நிறத்தில் தோன்றும் என்று அர்த்தமல்ல. ஆனால் சில நேரங்களில் வளிமண்டல நிகழ்வுகள் காரணமாக, சந்திரனின் நிறம் நீல நிறமாகத் தோன்றலாம்.

Massive Change in Moon சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Massive Change in Moon சிறுவர்களுக்கான உலக செய்திகள்

ஆனால், ப்ளூ மூன் எல்லாமே நீலமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. சிவப்பு ஒளியைத் தடுக்கும் வகையில் குறுக்கே ஏதாவது இருந்தால் சந்திரன் நீல நிறத்தில் தோன்றலாம். இதுபோன்ற சூழல் எரிமலை வெடிப்பு ஏற்பட்டால் அந்தப் பகுதியில் இருந்து பார்க்கும்போது நிலவு நீல நிறத்தில் தெரியக்கூடும்.சூரியன் மறைந்த உடனேயே ப்ளூ மூனைப் பார்ப்பது நல்லது. அந்த நேரத்தில் அது மிகவும் அழகாக இருக்கும்.

இந்த முறை ப்ளூ மூன் தோன்றும்போது, ​​ப்ளூ மூன் ஓகஸ்ட் 30 இரவு 8:37 மணிக்கு மிகவும் பிரகாசமாக இருக்கும்.

 

Kidhours – Massive Change in Moon

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.