Masco Attack சிறுவர்களுக்கான உலக செய்திகள்
நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் 133 இசை நிகழ்ச்சியாளர்களை கொன்ற பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், நேட்டோ செய்தித் தொடர்பாளர் ஃபரா தக்லல்லா தனது டுவிட்டர் கணக்கில் அவரது கண்டனங்களை வெளியிட்டுள்ளார்.அதில் அவர், “மொஸ்கோவில் கச்சேரி நடத்துபவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம், இதுபோன்ற கொடூரமான குற்றங்களை எதுவும் நியாயப்படுத்த முடியாது.
பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என கூறியுள்ளார்.அத்தோடு, “மொஸ்கோவில் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலை நான் கண்டிக்கிறேன். எங்கும் அப்பாவி உயிர்கள் பலியாவது மனித சோகம்.
மொஸ்கோவிற்கு வெளியே நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன். பாதுகாப்பற்ற மக்களை பயங்கரவாதம் மீண்டும் குறிவைத்துள்ளது.
சர்வதேச சமூகம் பயங்கரவாதத்தின் கொடுமைக்கு எதிராக உறுதியாக ஒன்றுபட வேண்டும்” என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் குறிப்பிட்டுள்ளார்.
Kidhours – Masco Attack
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.