Tamil Kids News Mars Planet சிறுவர்களுக்கான உலக செய்திகள்
செவ்வாய் கிரகத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் ஆய்வுகளின் முடிவில் சுமார் 7.2 ஆயிரம் கிலோ கழிவுகள் அந்த கிரகத்தில் விடப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேற்கு வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் ரோபோடிக்ஸ் துறையில் முதுகலை ஆராய்ச்சியாளரான காக்ரி கிலிக், தி கான்வெர்சேஷன் கட்டுரையில் செவ்வாய்
கிரகத்தில் 15,000 பவுண்டுகளுக்கு மேல் விடப்பட்ட குப்பைகளின் அளவு மற்றும் தன்மைகளை பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார்.
அவரின் ஆய்வுப்படி செவ்வாய் கிரகத்தில் இருக்கும் குப்பைகள் முக்கியமாக கைவிடப்பட்ட வன்பொருள், செயலற்ற விண்கலம் மற்றும் செயலிழந்த விண்கலங்களிலிருந்து வருகிறது என்பது தெரிய வருகிறது.
செவ்வாய் கிரகத்திற்கான விண்வெளிப் பயணங்களுக்கு விண்கலத்தைப் பாதுகாக்கும் ஒரு தொகுதி தேவைப்படுகிறது.
விண்கலம் கிரகத்தின் வளிமண்டலத்தை கடந்து செல்லும் போது ஒரு வெப்பக் கவசத்தையும், ஒரு பாராசூட் மற்றும் தரையிறங்கும் வன்பொருளையும் உள்ளடக்கி இருக்கும். இதை பயன்படுத்தி தான் கலம் மென்மையாக தரையிறங்கும்.
இப்படி விண்கலம் பிரிந்த பின்னர் அதை ஏந்தி வந்த பாதுகாப்பு தொகுதி பகுதிகளாக பிரிந்து கிரகத்தின் பல்வேறு இடங்களில் சிதறி விழுந்து விடும்.
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள குப்பைகளுக்கு மற்றொரு பெரிய பங்களிப்பு செயலற்ற விண்கலமாகும்.
தற்போது, மார்ஸ் 3 லேண்டர், மார்ஸ் 6 லேண்டர், வைக்கிங் 1 லேண்டர், வைக்கிங் 2 லேண்டர், சோஜர்னர் ரோவர், முன்பு தொலைந்து போன பீகிள் 2 லேண்டர், பீனிக்ஸ் லேண்டர், ஸ்பிரிட் ரோவர் மற்றும் ஆப்பர்சூனிட்டி ரோவர் உள்ளிட்ட ஒன்பது விண்கலங்கள் செவ்வாய் கிரகத்தில் உள்ளன.
இந்த விண்கலங்களில் பெரும்பாலானவை அப்படியே இருந்தாலும், சில விண்கலங்கள் தேய்மானத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் இந்த கலன்களில் இருந்து வெளியேறிய சிறிய குப்பைத் துண்டுகள் கிரகத்தில் சிதறிக்கிடக்கின்றன.
கிரகத்தின் மூன்றாவது வகை குப்பைகள் விபத்துக்குள்ளான அல்லது கட்டுப்பாட்டை இழந்த, தோல்வியான விண்கலத்தின் எச்சங்களாகும். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இரண்டு விண்கலங்கள் விபத்துக்குள்ளானது.
மேலும் நான்கு விண்கலங்கள் பாதுகாப்பாக தரையிறங்கிய பிறகு பூமியுடனான தொடர்பை இழந்தன.
காக்ரி கிலிக் கூற்றுப்படி, செவ்வாய் கிரகத்திற்கு இதுவரை அனுப்பப்பட்ட விண்கலங்களின் மொத்த நிறை 22,000 பவுண்டுகள் (9979 கிலோகிராம்) ஆகும்.
இதில், 6,306 பவுண்டுகள் (2,860 கிலோகிராம்) நிறை விண்கலங்கள் தற்போது செயல்படுகின்றன. மற்றவை அதன் மேற்பரப்பில் குப்பைகளாக உள்ளன.
இந்த பெரிய அளவிலான கழிவுகள் செவ்வாய் கிரகத்திற்கு விஞ்ஞானிகளின் தற்போதைய மற்றும் எதிர்கால பயணங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று நம்புகின்றனர்.
பூமியில் போட்ட குப்பைகள் போதாது என்று விண்வெளியில் , மற்ற கிரகங்களிலும் மனிதன் குப்பையை சேர்த்து வருகிறான்.
kidhours – Tamil Kids News Mars Planet, Tamil Kids News Mars Planet update
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.