Tamil Kids News lk சிறுவர்களுக்கான உலக செய்திகள்
இலங்கையில் தற்கொலைகளால் வருடாந்தம் 3 ஆயிரத்து 200 பேர் இறப்பதாக தேசிய உளவியல் சுகாதார ஆய்வுக்கூடம் தெரிவித்துள்ளது.

தற்கொலை எதிர்ப்பு தினமான இன்று, தேசிய உளவியல் சுகாதார ஆய்வுக்கூடத்தின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் அரோஷ விஜேவிக்ரமிடம் எமது செய்திசேவை வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்
செயல் மூலம் நம்பிக்கையை ஏற்படுத்தல் என்பது இந்த வருடத்தின் உலக தற்கொலை தடுப்பு தினத்தின் தொனிப்பொருளாகும்.
வருடாந்தம், சுமார் 3 இலட்சத்து 3 ஆயிரம் பேர் தமது வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்வதாகவும், மேலும் பலர் அவ்வாறான சிந்தனைகளுடன் வாழ்வதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே அதனை தடுப்பதற்கான விழிப்புணர்வு திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் வரையில் தமது உயிரை மாய்த்துக் கொள்வதாக கடந்த ஆய்வுகளில் இனம் காணப்பட்டிருப்பதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் உளநல வைத்தியர் சிவதாஸ் தெரிவித்துள்ளார்.
உலக தற்கொலை எதிர்ப்பு தின நிகழ்வு இன்று கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தில் தமது உயிரை மாய்த்துக் கொள்வோரின் வீதம் அதிகரித்து காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
kidhours – Tamil Kids News lk
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.