Later Centuries Letters பொது அறிவு செய்திகள்
பிரெஞ்சு நாட்டுக்கும் பிரிட்டனுக்கும் இடையே கடந்த 18ஆம் நூற் றாண்டு காலப்பகுதியில் கடுமையான போர் நடைபெற்றது. இப்போரின்போது, கலாடீ (Galatee) என்ற பிரெஞ்சு போர்க்- கப்பலில் வேலைபார்த்த மாலுமிகளுக்கு. அவர்களின் பெற்றோர். மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தி- னர் ஏராளமான கடிதங்களை எழுதி அனுப்பியுள்ளனர். அந்த பிரெஞ்சு போர்க்கப்பலை, பிரிட்டனின் ரோயல் கடற்படை சிறைப்பிடித்து கப்பலில் இருந்த மாலுமிகள், சிப்பந்திகளுக்கு, அவர்க- ளின் குடும்பத்தினர் எழுதி அனுப்பிய கடிதங்களையும் கொடுக்க மறுத்து பறிமுதல் செய்தது.
பின்னர் அக்கடிதங்கள் 1757-58ஆம் ஆண்டளவில் இங்கிலாந்துக்கு அனுப்- பப்பட்டு, லண்டனில் உள்ள பிரிட்டன் கடற்படை நிர்வாக துறையிடம் ஒப்படைக்- கப்பட்டது. அக்கடிதங்களை கடற்படை அதிகாரிகள் “ஏதாவது ராணுவ தகவல்கள் பகிரப்படலாம்” என்ற சந்தேகத்தின் பேரில் பிரித்து படித்துள்ளனர். எனினும்
அக்கடிதங்களில் வெறும் குடும்ப
விடயங்கள் மட்டுமே இருந்துள் ளன. இதனால் அக்கடிதங்களை குடோனில் போட்டு பாதுகாத்து வந்தது பிரிட்டன் கடற்படை இவ்வாறு 3 நூற்றாண்டுகள் 265 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது அக்கடிதங்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக
கல்வியாளர்களின் கைகளுக்கு கிடைத்துள்ளன. இங்கிலாந்தின் கியூ நகரில் உள்ள தேசிய ஆவண காப்பகத்தில் பிரெஞ்சு போர் கப்பல் மாலுமிகளிகடிதங்கள் அடங்கிய பெட்டியை பேரா- சிரியர் ரெனாட் மோரியக்ஸ் ஆர்வத்துடன் திறந்து பார்த்துள்ளார். அப்பெட்டிக்குள்
கிட்டத்தட்ட 104 கடிதங்கள் இருந்துள்ளன. இதுகுறித்து பேராசிரியர் ரெனாட் மோரி- யாக்ஸ் கூறுகையில், “இந்தத் தனிப்பட்டகடிதங்களை எழுதிய பிறகு,படித்து பார்க்கும் முதல் நபர்நானாகத்தான் இருப்பேன்.
இக்கடிதங்களைப் படிக்கும்- போது, கப்பல் மாலுமிகளின் குடும்பத்தினர் உணர்வு- பூர்வமாக எழுதியிருந்ததை உணர முடிந்தது. அந்த பிரெஞ்சு கப்பலில்
வேலைபார்த்த சிப்பந்திகள் பலரின் மனைவிகள், பெற்- றோர்கள் மிக உருக்கமாக எழுதியுள்ளனர்.சிலரோ, “எங்கு இருக்கி- றீர்கள், எப்படி இருக்கீறீர்கள் என்று கூட எங்களுக்கு தெரி-
யாது” என மிக உருக்கமாக எழுதியிருக்கின்றனர்! இன்றைய காலகட்டத்தில் ஜூம், வாட்ஸ்-அப் ஆகியவை நம்மிடம் உள்ளன. ஆனால், 18ஆம் நூற்றாண்டில் வெறும் கடிதங்கள் மட்டுமே மக்களிடம் இருந்தன. ஆனால், அவர்கள் உணர்வுப்பூர்வமாக எழுதியிருந்தது பரிச்சயமான என்று கூட எங்களுக்கு தெரியாது” என மிக உருக்கமாக
எழுதியிருக்கின்றனர்! இன்றைய காலகட்டத்தில் ஜூம், வாட்ஸ்-அப் ஆகியவை நம்மிடம் உள்ளன. ஆனால்,18ஆம் நூற்றாண்டில் வெறும் கடிதங்கள் மட்டுமே மக்களிடம் இருந்தன. ஆனால், அவர்கள் உணர்வுப்பூர்வமாக எழுதியிருந்தது பரிச்சயமான முடிந்தவரை நம் உணர்வுகளை வேண்- டியவர்களுக்கு கடத்துவோம்.முடிந்த வரையில் பரிமாறுவோம் அன்பை மட்டும்
Kidhours – Later Centuries Letters
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.