இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் உலகமெங்கும் பல பிராந்திய ஒத்துழைப்பு நிறுவனங்கள் தோன்றின.அவை பல காரணங்கள் கருதி உருவாக்கப் பட்டன. அத்தகைய வகையினுள் சார்க் அமைப்பு உருவானது.இதை உருவாக்குவதில் முன் நின்றவர் பங்களாதேஷ் முன்னாள் ஜனாதிபதி ஷியாஉர் ரஹ்மான் தொடக்கத்தில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பூட்டான், பங்களாதேஷ், மாலைதீவு, நேபாளம் என இருந்தது.பின்பு மிக அண்மையில் ஆப்கானிஸ்தான் இணைந்து கொண்டது.பல இலட்சியங்களையும் கொள்கைகளும் கொண்டு உருவாக்கப்பட்ட சார்க் ஒத்துழைப்புக்கான விடயங்களைதயாரித்துக் கொண்டு முதலாவதாக டாக்கா நகரில் 1985 கூடியது.இவ்வமைப்பின் முக்கிய விடயங்களாக கல்வி, கலை, வானிலை, சுகாதாரம், அஞ்சல், விளையாட்டு, போக்குவரத்து, தொலைத் தொடர்பு, போதைத் தடுப்பு என்பன காணப்பட்டது.
சார்க் அமைப்பானது தென்னாசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி , ஒத்துழைப்பு , வர்த்தகம் , முதலீடுகள், சமூக அபிவிருத்தி , நட்புறவுடன் கூடிய தலையீட்டின் பொருட்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றுதல் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு என்பனவற்றினை குறிக்கோளாக கொண்டு கட்டியெழுப்பப்பட்டுள்ள ஒரு அமைப்பாகும். இவ்வாறான சார்க் அமைப்பானது 1985ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் திகதி பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் ஆரம்பத்தில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான்,பூட்டான் ஆகிய நாடுகள் அங்கத்துவம் வகித்தன. இதன்பின்பு இறுதியாக ஆப்கானிஸ்தான் இணைந்துள்ளது.
இவ் சார்க் அமைப்பின் செயலாளராக Amjad Hussain B.Sia விளங்குகின்றார். சார்க் அமைப்பு நாடுகளின் மொத்த உலக ரீதியான பரப்பு 5099611 சதுரகிலோமீட்டர் ஆகும். இவ் அமைப்பின் பிரதான மொழி ஆங்கிலம் ஆகும். உலக மொத்த சனத்தொகையில் 21% இனை சார்க் அமைப்பு கொண்டுள்ளது. இவ் சார்க் அமைப்பின் கண்காணிப்பு மற்றும் அவதானிப்பு நாடுகளாக சீனா, ஐரோப்பிய யூனியன், ஈரான்,ஜப்பான், மௌரிடஸ், மியான்மார், தென்கொரியா போன்றனவாகும்.
சார்க் அமைப்பு நாடுகளினது சனத்தொகையினை அவதானிக்குமிடத்து ஆப்கானிஸ்தான்(38.9மில்லியன்), பங்களாதேஷ்(170 மில்லியன்), பூட்டான்(770308), இந்தியா(1.38 பில்லியன்), மாலைதீவு(436330), நேபாளம்(29.1மில்லியன்), பாகிஸ்தான்(220 மில்லியன்), இலங்கை(21.4 மில்லியன்) கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 1.78 பில்லியன் சனத்தொகையினை தன்னகத்தே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ் சார்க் அமைப்பு நாடுகளின் ஆண்டு ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தி வருமானம் 3289100 மில்லியன் $ ஆகும்.
இவ் சார்க் அமைப்பு நாடுகளின் பணமுறைகளினை அவதானிக்குமிடத்து ஆப்கானிஸ்தான்(ஆப்கானி), பங்களாதேஷ்(டக்கா), பூட்டான்(துகுலடும்), இந்தியா(ரூபாய்), நேபாளம்(ரூபாய்), பாகிஸ்தான்(ரூபாய்), இலங்கை (ரூபாய்) போன்றன ஆகும். பிராந்திய ஒத்துழைப்பினை மேம்படுத்தும் பொருட்டு முக்கியமான 5 துறைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. அவ்வாறு விசேட கவனம் செலுத்தப்பட்ட துறைகளினையும் அதன் இணைப்பாக்க பணிகள் ஒப்படைக்கப்பட்ட 5 நாடுகளினையும் பின்வருமாறு கூறிக்கொள்ளலாம்.
1.இந்தியா- வானியல்துறை
2.பங்களாதேஷ்- கமத்தொழில் துறை
3.பாகிஸ்தான்- தொலைத்தொடர்பு துறை
4.நேபாளம்- சனத்தொகை மற்றும் சுகாதார சேவைகள் துறை
5.இலங்கை- கிராமிய அபிவிருத்தி துறை
6.சார்க் அமைப்பின் நோக்கங்கள்
தென்னாசிய பிராந்திய ஒத்துழைப்புக்கான அமைப்பு என கூட்டமைப்பு பெற்ற அங்கத்துவ நாடுகளின் கூட்டமைப்பில் காணப்படுகின்ற நோக்கங்கள் பிராந்திய ரீதியில் மிகவும் முக்கியமானவையாகும்.
அங்கத்துவ நாடுகள் ஒவ்வொன்றினதும் சுதந்திரம், இறைமை, மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டினை மதித்தல்.
அங்கத்துவ நாடுகளுக்கிடையே சுயநம்பிக்கையை உறுதி செய்தல்,பலப்படுத்துதல் மற்றும் வளர்த்தல்.
அபிவிருத்தி அடைந்துவரும் ஏனைய நாடுகளுடன் ஒத்துழைப்பினை கட்டியெழுப்புதல்.
கலாசார மேம்பாட்டினை துரிதப்படுத்துதல்.
அனைத்து மக்கள் பிரிவினரும் கௌரவமாக வாழ்வதற்கு ஏற்பாடு செய்தல், அவர்களது அனைத்து ஆற்றல்களையும் மேலோங்க செய்வதற்கு வாய்ப்பளித்தல், நலனோம்புகையினை அதிகரிக்க செய்தல் மற்றும் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்துதல்.
ஒவ்வொரு நாடுகளின் மீதும் அதிகாரத்தை பயன்படுத்தாதிருத்தல், உள்ளக விடயங்களில் தலையிடாதிருத்தல் மற்றும் பிணக்குகளினை சமாதான முறையில் தீர்த்தல்.
ஒரு அங்கத்துவ நாட்டின் பிரச்சனை தொடர்பில் ஏனைய அங்கத்தவர்கள் பரஸ்பர நம்பிக்கை, புரிந்துணர்வு மற்றும் மதிப்பீட்டின் பொருட்டு பங்களிப்பு செய்தல்.
பொருளாதார தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான துறைகள் தொடர்பில் பரஸ்பர பங்களிப்பு, ஒத்துழைப்பினை வழங்குதல்.
சமனான நோக்கங்களினை கொண்ட பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் ஒத்துழைப்புடன் செயலாற்றுதல்.
*********************************
kidhours-upcoming
covid19_update #kids songs,#kids health,#siruvar neram,kids songs,siruvar seithigal,siruvar vilaiyattu,siruvar kalvi, world tamil news,tamil first news,tamils,raasi palan,tamil cinema,new tamil movies,vijay sethupathi movies,latest tamil movies,action tamil movie,new tamil movies 2020,new tamil movies released,tamil new film,film tamil,online movies tamil,tamil,english to tamil,english to tamil translation,tamil translation,english to tamil dictionary,tamil typing,hindi to tamil,english to tamil typing
english to tamil sentence translation online,google tamil typing,tamil dictionary,hindi to,tamil translation,tamil to english translator app,sinhala to tamil,tamil to english translation sentences,jothidam,tamil jathagam,tamil jathagam online,daily thanthi jothidam
nadi jothidam,josiyam in tamil,tamil jathagam online free,tamil jothidam online
online josiyam tamil,kulanthai pirappu jothidam in tamil#Insurance #Gas#Electricity#Loans#Mortgage#Attorney#Lawyer#Donate#Conference Call
Degree#Credit