Tamil Kids News Jupiter Planet புவியியல்
உலகில் மிகப் பெரிய மற்றும் துல்லியமான தொலைநோக்கி கருவியில் பதிவாகியுள்ளது வியாழன் கோளின் பிரம்மாண்டமான காட்சி. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி கருவி எடுத்த இந்த புகைப்படம், பார்த்து அசர்ந்து நிற்கும் அளவு துல்லியமாகப் பதிவாகியுள்ளது.
அதில் வியாழனைச் சுற்றியுள்ள அரோராக்கள், ராட்சத புயல்கள், நிலவுகள் மற்றும் வளையங்கள் ஆகியவை மிகத் துல்லியமாகப் பதிவாகியுள்ளது. இந்த புகைப்படத்தைப் பார்த்த ஆராய்ச்சியாளர்களே வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி கருவியை உருவாக்க அமெரிக்கா டாலர் படி 10 பில்லியின் செலவழிக்கப்பட்டுள்ளது. இதனைச் சர்வதேச திட்டமாக நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் கனடா விண்வெளி நிறுவனம் இணைத்து சாத்தியப்படுத்தியுள்ளனர்.
தொலைநோக்கியிலிருந்து பல படங்களின் கலவையிலிருந்து உருவாக்கப்பட்ட வியாழனின் தனித்துவ படத்தில், வெளிப்புறத்தில் தெரியும் அரோராக்கள் வியாழனின் வடக்கு மற்றும் தெற்கு துருவங்களுக்கு மேல் உயரமான பகுதிகளுக்கு விரிவடைந்து இருப்பதாக நாசா கூறியுள்ளது. அரோராஸ் என்பது சூரியனால் ஏற்படும் ஒளி காட்சிகள் ஆகும்.
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி கருவியைக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாசா அமைத்தது. தற்போது இது பூமியிலிருந்து ஒரு மில்லியன் மைல் தூரத்தில் நிலைகொண்டுள்ளது.
தற்போது, இந்த தொலைநோக்கி வெளியிட்டுள்ள வியாழனின் துல்லிய புகைப்படத்தைப் பற்றி ஆராய்ச்சி குழுவில் ஒருவரான கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிரக வானியலாளர் இம்கே டி பேட்டர் கூறுகையில் வியாழன் கிரகத்தை இப்படிப் பார்த்ததே இல்லை என்றும் இது நம்பமுடியாத அளவு உள்ளது என்றும் கூறினார்.
மேலும், புகைப்படம் இந்த அளவு தெளிவாக வரும் என்பதை நாங்களே எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இன்னும் 20 ஆண்டுகளுக்கு ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி கருவி மூலம் பல வானிலை ஆராய்ச்சிகள் மேற்கொள்ளபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
kidhours – Tamil Kids News Jupiter Planet
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.