Tuesday, February 25, 2025
Homeசிறுவர் செய்திகள்ஜப்பானின் அவசர எச்சரிக்கை Japan Warning

ஜப்பானின் அவசர எச்சரிக்கை Japan Warning

- Advertisement -

Japan Warning சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ஜப்பான் எல்லைக்குள் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதால் ஜப்பான் பிரதமர் அலுவலகம் அவசர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

வடகொரியாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் விதமாக அமெரிக்க படைகள் கொரிய படைகளுடன் இணைந்து, ஆண்டுதோறும் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

- Advertisement -

இந்த கூட்டுப்போர் பயிற்சியை ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கை என கூறி வடகொரியா தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

- Advertisement -
Japan Warning சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Japan Warning சிறுவர்களுக்கான உலக செய்திகள்

 

இந்த சூழலில் வடகொரியாவின் எதிர்ப்பை மீறி கடந்த மாதம் அமெரிக்க மற்றும் தென்கொரிய படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கின.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதனை செய்து வருகிறது. இந்த நிலையில் வடகொரியா நேற்று ஒரே நாளில் 23 ஏவுகணைகளை தென்கொரியா எல்லையை நோக்கி வீசியது.

வானில் இருந்து புறப்பட்டு தரையில் உள்ள இலக்குகளை தாக்கும் இந்த ஏவுகணைகள் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையை நோக்கி வீசப்பட்டன.

இந்த நிலையில் இன்று வடகொரியா வீசிய ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை ஜப்பான் கடல் எல்லையை கடந்து பசிபிக் கடலில் விழுந்தது.

இதனால் பெரும் பதற்றம் உருவானது. இதையடுத்து ஜப்பான் பிரதமர் அலுவலகம் அவசர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ஜப்பான் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

தங்கள் எல்லைக்குள் வடகொரியா ஏவுகணையை வீசியதற்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

kidhours – Japan Warning

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.