Japan Satellite பொது அறிவு செய்திகள்
ஜப்பான் சந்திரனுக்கு அனுப்பிய விண்கலமானது, இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்து பூமிக்கு புதிய படங்களை அனுப்பியுள்ளது.
குறித்த ஆளில்லா விண்கலம், கடந்த ஜனவரி 19 ஆம் திகதி சந்திரனில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
அதன்படி, slim என்னும் விண்கலத்தை அனுப்பியதன் மூலம் ஜப்பான் இந்த சாதனையை படைத்த ஐந்தாவது நாடாகியுள்ளது.ஓர் சந்திர இரவென்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமென்பதுடன் கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி அந்த கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்து விண்கலம் மீண்டும் விழித்தெழுந்து இயங்கத் தொடங்கியது.
அத்துடன், ஜப்பானிய விண்வெளி முகவரகம், இந்த விண்கலம் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று(28) மீண்டும் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.
Kidhours – Japan Satellite
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.