Israel People சிறுவர்களுக்கான உலக செய்திகள்
காசா எல்லையை ஒட்டிய சிறிய இஸ்ரேலிய நகரங்களில் உள்ள பொதுமக்களுக்கு துப்பாக்கிகளை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்ரீவ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் கடுமையான மோதல் நிலை காணப்படுகிறது.அதில் ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன் பலர் பணயக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பொதுமக்களுக்கு துப்பாக்கிகள் வழங்குவது அந்த குடிமக்கள் வாழும் நகரங்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.

எனவே, காசா பகுதிக்கு அருகில் உள்ள சிறிய நகரங்களின் பாதுகாப்பை நகர மக்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்ரீவ் மேலும் விளக்கமளித்துள்ளார்.அதேவேளை, இஸ்ரேலிய ஊடகவியலாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து போர்க் களத்தில் செய்தி சேகரிக்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் முகமாக இராணுவ வீரர்களும் செயற்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
Kidhours – Israel People
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.