Israel Gaza Ceasefire சிறுவர்களுக்கான உலக செய்திகள்
இஸ்ரேல் காஸா இடையில் 5 நாட்களாக மோதல்கள் இடம்பெற்றுவந்த நிலையில், இன்றைய தினம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனிய ஆயுதக்குழுவான இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பின் தலைவன் காதர் அதானென் இஸ்ரேல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் காஸா இடையிலான மோதல்கள் அதிகரித்துள்ளன.காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழு ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.
இந்நிலையில் ஜிகாத் ஆயுதக்குழுவை குறிவைத்து கடந்த செவ்வாய்கிழமை முதல் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியமையால் 30 பேர் உயிரிழந்தனர்.இந்த சூழலில் கடந்த சில நாட்களாக இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் காசா முனையில் செயல்பட்டு வரும் இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழுவின் மூத்த தளபதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் ஜிகாத் ஆயுதக்குழுவின் ஏவுகணை தாக்குதல் பிரிவு தளபதியும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக நடந்து வந்த மோதலுக்குப் பிறகு பாலஸ்தீன் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Kidhours – Israel Gaza Ceasefire
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.