Tuesday, February 25, 2025
Homeசிறுவர் செய்திகள்சர்வதேச சுகாதார அவசரநிலை International Health Emergency WHO

சர்வதேச சுகாதார அவசரநிலை International Health Emergency WHO

- Advertisement -

International health emergency  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

குரங்கு அம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் சர்வதேச சுகாதார அவசரநிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவல் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மறுபுறம் புதிய நோய் தொற்று பரவல் எண்ணிக்கை சில நாடுகளில் இன்னும் அதிகரித்து வருகிறது.

- Advertisement -
International health emergency  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
International health emergency  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

 

- Advertisement -

இந்த நிலையில் சர்வதேச பொது சுகாதார அவசர அச்சுறுத்தலாக குரங்கு அம்மை நோய் பரவல் இருந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பல நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய் பரவல் குறித்த அவசரக் குழுவின் மூன்றாவது கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கூட்டப்பட்டது.

கமிட்டியின் 15 உறுப்பினர்களில் 11 பேரும், 9 ஆலோசகர்களில் 6 பேரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) பேசுகையில்,

“உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவலில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், சில நாடுகளில் சரிவை சந்தித்து வருகிறது.

அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் பிராந்தியங்களில் சில நாடுகளில் நோய் தொற்று அபாயம் அதிகரித்து வருகின்றன, மேலும் சில நாடுகளில் குறைவாக பதிவாகியுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே, 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 70,000 உறுதிப்படுத்தப்பட்டகுரங்கு அம்மை நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. பெரும்பாலான வழக்குகள் ஆண்கள் மத்தியில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Kidhours – International health emergency

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.