Imprisonment the Former president சிறுவர்களுக்கான உலக செய்திகள்
தென் அமெரிக்கா நாடான பெருவின் முன்னாள் ஜனாதிபதி அலெஜான்ட்ரோ டோலிடோவுக்கு ( Alejandro Toledo) அந்நாட்டு நீதி மன்றத்தினால் 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது பிரேசிலில் உள்ள கட்டுமான நிறுவனத்துடன் ஊழலில் ஈடுபட்டதாக பெருவின் முன்னாள் ஜனாதிபதிக்கு ( Alejandro Toledo) 20 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அலெஜான்ட்ரோ டோலிடோ ( Alejandro Toledo) , கட்டுமான நிறுவனத்தில் பல இலட்சம் டாலர்கள் இலஞ்சம் பெற்றுள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெருவில் நெடுஞ்சாலை அமைக்க அனுமதித்ததற்கு ஓடேபெக்ட் என்னும் கட்டுமான நிறுவனத்தில் இருந்து 35 மில்லியன் டாலர் இலஞ்சம் பெற்றதாக டோலிடோ ( Alejandro Toledo) மீது அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளார்.
அலெஜான்ட்ரோ டோலிடோ ( Alejandro Toledo) 2001 முதல் 2006 வரை பெருவின் அதிபராக பதவி வகித்துள்ளார். இந்த வழக்கை அமெரிக்கா விசாரணை நடத்தியது. அதன்படி, மெக்சிகோ, குவாதமாலா, ஈகுவடார் ஆகிய நாடுகளிலும் அமெரிக்கா தனது விசாரணையைத் தொடங்கியது.

மேலும், இந்த விசாரணையில் டோலிடோ உள்பட பெருவின் முன்னாள் ஜனாதிபதி கள் 4 பேர் மீது அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். எனினும் இந்த ஊழல் வழக்கை அலெஜான்ட்ரோ டோலிடோ ( Alejandro Toledo) மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Kidhours – Imprisonment the Former president
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.