Imprisonment for dirty clothes சிறுவர்களுக்கான உலக செய்திகள்
வட அமெரிக்கா நாடான கனடாவில், அழுக்கு ஆடை தொடர்பில் வீட்டில் ஏற்பட்ட வாக்கு வாதம் அதிகரித்து பெண் ஒருவரை படுகொலை செய்த இந்த நபருக்கு நீதிமன்றம் பத்தாண்டு கால சிறைத்தண்டனை விதித்ததுடன் தண்டனைக் காலத்தின் பின்னர் நாடு கடத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
அதாவது பிரிட்டிஸ் கொலம்பியாவின் சர்ரே பகுதியில் 39 வயதான ஹார்பீரிட் சிங் என்ற நபரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.
மனைவியின் சகோதரியான பால்ஜிட் காவுர் என்ற பெண்ணை ஹார்பீரிட் சிங் படுகொலை செய்துள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டிற்குள் அழுக்கான காலுறை அணிந்தமை தொடர்பில் ஏற்பட் வாய்த்தர்க்கம் குடும்ப முரண்பாடாக மாறி இறுதியில் கொலையில் முடிந்துள்ளது என வழக்கு விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்த்துள்ளளனர்.
Kidhours – Imprisonment for dirty clothes.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.