Tamil Kids News IMF சிறுவர்களுக்கான உலக செய்திகள்
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சியில் இலங்கையின் கடன் வழங்கும் நாடுகளான
ஜப்பான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.
கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாடாக இலங்கை தற்போது எதிர்நோக்கிவரும் நிலைமை குறித்து பூகோள அபிவிருத்தி நிலையத்திற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இலங்கையைப் பொறுத்தவரையில், ஜப்பான், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட மூன்று முக்கிய கடன் வழங்கும் நாடுகள் உள்ளன. அந்த நாடுகளின் பங்கேற்பு விரைவில் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
முதலில் கடனைப் பற்றி வெளிப்படைத்தன்மை வேண்டும். நாங்கள் முழு பிரச்சினையையும் பார்க்க வேண்டும். ஒரு பகுதியாக அல்ல. இரண்டாவதாக, அனைத்து கடன் வழங்குபவர்களையும் சமமாக கையாளும் தன்மை தேவை.
மூன்றாவதாக அனைத்து கடன் வழங்குபவர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு நிறுவனத் திட்டம் தேவை.
நான்காவதாக, கடனளிப்பவர்களுடனும் எங்களுடனும் மற்ற நிறுவனங்களுடனும் சமமாக கையாள்வதற்கு அந்த நாடுகளில் இருந்து அரசியல் விருப்பம் தேவை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
kidhours – Tamil Kids News IMF
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.