ICC Penalty சிறுவர்களுக்கான உலக செய்திகள்
லண்டன் ஓவலில் நடந்து முடிந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் குறித்த நேரத்துக்குள் பந்துவீசி முடிக்கத் தவறியதால் பெரிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளன. லண்டனில் நடைபெற்ற உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த இப்போட்டியில் குறித்த நேரத்துக்குள் பந்துவீசி முடிக்கத் தவறியமைக்காக இந்திய வீரர்களுக்கு அவர்களின் ஊதியத்தில் 100 சதவீதமும், அவுஸ்திரேலிய வீரர்களுக்கு ஊதியத்தில் 80 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி இன்றைய தினம் (12-06-2023) தெரிவித்துள்ளது.
இந்தியா குறித்த நேரத்துக்குள் 5 ஓவர்கள் குறைவாகவும் அவுஸ்திரேலியா 4 ஓவர்கள் குறைவாகவும் வீசியதாக சர்வதேச கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா மற்றும் அவுஸ்தரேலிய அணித்தலைவர் பெட் கமின்ஸ் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் மேலதிக விசாரணைகளை நடாத்தவில்லை என ஐசிசி தெரிவித்துள்ளது.
Kidhours – ICC Penalty
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.