Tamil Kids News Hydrogen Train சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகிலேயே முதல்முறையாக ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் ரயில் சேவை ஜொமனியில் 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
லோயா் சாக்ஸோனி மாகாணத்துக்கு வழங்கப்பட்டுள்ள 14 ஹைட்ரஜன் ரயில்கள் மூலம், 4 நகரங்களை இணைக்கும் 100 கி.மீ. ரயில் பாதையில் இந்த சேவை வழங்கப்படுகிறது.
அதேசமயம் இதுவரை பயன்படுத்தப்பட்ட டீசல் ரயில்களுக்கு மாற்றீடாக புவியை வெப்பமாக்கும் வாயுக்களை முற்றிலும் வெளியிடாத ஹைட்ரஜன் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
மேலும் 9.3 கோடி யூரோ (சுமாா் ரூ.737 கோடி) செலவில் தொடங்கப்பட்டுள்ள இந்த ரயில் திட்டத்தால் ஆண்டுக்கு 4,400 தொன் கரியமில வாயு காற்றில் கலப்பது தடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
kidhours – Tamil Kids News Hydrogen Train
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.