Wednesday, January 22, 2025
Homeசுகாதாரம்தினமும் துளசி இலைகள் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் Tamil Kids News Health #...

தினமும் துளசி இலைகள் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் Tamil Kids News Health # World Best Tamil

- Advertisement -

Tamil Kids News Health சிறுவர் சுகாதாரம்

- Advertisement -

நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் அதன் பல்வேறு பயன்பாடுகளுக்காகவும் துளசி பயன்படுத்தப்படுகிறது. தினசரி உணவில் 4 துளசி இலைகளாலது எடுத்துக் கொள்வது நல்லது. இந்த துளசி இலைகள் என்னென்ன பிரச்சினைகளுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன என்று இங்கே பார்ப்போம்
துளசி பல அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிரம்பியது. இது நீரிழிவு தொடர்பான அல்லது உடல் பருமன் போன்ற இரத்த சர்க்கரை தொடர்பான நோய்களை நிர்வகிக்க முயற்சிக்கும் போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

துளசியை தினமும் சிறிதளவு எடுத்துக் கொண்டே வரும்போது, நம்முடைய கணையச் செயல்பாடு மேம்படும். பீட்டா செல்களின் செயல்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு இன்சுலின் சுரப்பு முறையாக சுரக்க ஆரம்பிக்கும். இதனால் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
சளி மற்றும் இருமலால் அவதிப்படுகிறீர்களா? ஒரு கப் சூடான துளசி டீ குடியுங்கள். துளசி இலைகள் (துளசி) ஆன்டி பாடிகளின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனால் எந்த தொற்று நோய்களும் வராமல் தடுக்கிறது.

- Advertisement -

சளியை இருமலை சரிசெய்ய உதவுவதோடு, சுவாசப் பாதைகளையும் சுத்தம் செய்கிறது.

- Advertisement -
Tamil Kids News Health
Tamil Kids News Health

சிறுநீரக கற்கள் இருப்பவர்களுக்கு அடிவயிற்றில், வலி. சிறுநீர் வெளியேறும் போது வலி என படாத பாடு படுவார்கள். அதற்காக மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் சிறுநீரின் வழியாகவே அந்த கற்கள் வெளியேற ஆரம்பிக்கும். அந்த வலிகளைக் குறைக்க துளசி இலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சிறுநீரகத்தில் இருக்கும் திரவங்கள், யூரிக் அமிலம் ஆகியவற்றை சமநிலையில் வைக்க துளசி உதவுகிறது.

துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் குடித்து வராம். அதேபோல, ஒரு ஸ்பூன் துளசி பொடியுடன் தேன் கலந்து குடிக்கவோ அல்லது அப்படியே சாப்பிடவோ செய்யலாம்.
துளசி இலைகள் நம்முடைய இதயத்திற்கும் மிகவும் நல்லது.

துளசி இலைகள் நம்முடைய இரத்தத்தில் இருக்கும் கொலஸ்டிராலின் அளவைக் குறைப்பதன் மூலம், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து நம்மை காக்கிறது.

குறிப்பாக, இஸ்கிமியா மற்றும் பக்கவாதம் ஆகிய பிரச்சினைகள் உண்டாகாமல் தடுக்க உதவுகிறது. துளசியில் உள்ள அதிகப்படியான ஆன்டி- ஆக்சிடண்ட்டுகள் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினைகளைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
உயர் இரத்த அழுத்தம் உலகளவில் இருக்கும் மிகவும் பொதுவான நோயாகும். உலக சுகாதார நிறுவனத்தின் ள்ளிவிவரங்களின்படி, 10 பேரில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்.

இந்த உயர் ரத்த அழுத்ததத்தை துளசி இலைகளின் மூலம் கட்டுப்படுத்த முடியும். துளசி இலைகள் உயர் இரத்த அழுத்தம் போன்ற கடுமையான உடல்நிலையை நிர்வகிக்க உதவியாக இருக்கிறது.

ஆயுர்வேதத்தின்படி, வேம்பு மற்றும் துளசி சேர்த்த கலவையானது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதனால் தினமும் உங்களுடைய டீ போன்ற பானங்களிலும் குடிக்கும் தண்ணீரிலும் துளசியைச் சேர்த்துக் கொள்வது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவியாக இருக்கும்..

 

kidhours – Tamil Kids News Health , Tamil Kids News Health update

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.