Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rank-math domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/kidhou5/public_html/wp-includes/functions.php on line 6114
கூகுள் 12,000 ஊழியர்களுக்குப் பணிநீக்கம் Google Employees - சிறுவர்களுக்கான அறிவுத்திறன் வளர்ச்சிக்குரிய வழிகாட்டல்கள்
Saturday, November 23, 2024
Homeசிறுவர் செய்திகள்கூகுள் 12,000 ஊழியர்களுக்குப் பணிநீக்கம் Google Employees

கூகுள் 12,000 ஊழியர்களுக்குப் பணிநீக்கம் Google Employees

- Advertisement -

Google Employees  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் 12,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வரும் நிறுவனங்களின் பட்டியலில், கூகுள் நிறுவனமும் இப்போது இணைந்துள்ளது.கடந்த ஆண்டு (2022) முதல் அமெரிக்காவில் 1 லட்சத்து 94 ஆயிரம் பேர் வரை வேலையை இழந்துள்ளனர்.

- Advertisement -

இந்தநிலையில், இன்று காலை கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனத்தின் C.E.O சுந்தர் பிச்சை, அதன் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.இந்த குறிப்பிட்ட மின்னஞ்சல் 12 ஆயிரம் கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் அனுப்பப்பட்டுள்ளது.

- Advertisement -
Google Employees  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Google Employees  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

அந்த மின்னஞ்சலில் கூகுள் நிறுவனம், 12 ஆயிரம் பேர் வரை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்து இருப்பதாக, சுந்தர் பிச்சை குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் பிளாக் பக்கத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுந்தர் பிச்சை அனுப்பிய மின்னஞ்சலில், “நான் பகிர்ந்து கொள்ள சில கடினமான செய்திகள் உள்ளன. எங்கள் பணியாளர்களை குறைக்க முடிவு செய்துள்ளோம்.

இதனால் வேலையை இழக்கும் அமெரிக்க ஊழியர்களுக்கு ஏற்கனவே தனி மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம். மற்ற நாடுகளில் வேலை செய்யும் நபர்களுக்கு, உள்ளூர் சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் காரணமாக இந்த செயல்முறை நீண்ட நேரம் எடுக்கும்.இதன் மூலம் திறமைமிக்க சில நபர்களுக்கு நாங்கள் குட்பை சொல்கிறோம்.

மேலும் இப்போது எடுக்கப்பட்டு இருக்கும் முடிவுக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன்,” என அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டு இருந்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் கூகுள் வியத்தகு வளர்ச்சியைக் கண்டுள்ளது.

அந்த வளர்ச்சிக்கு தொடர்ந்து எரிபொருள் நிரப்பும் வகையில், இன்றைய பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, என சுந்தர் பிச்சை அந்த மெயிலில் கூறியுள்ளார்.

 

Kidhours – Google Employees

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.