Golden Tomb பொது அறிவு செய்திகள்
ஆர்மீனியாவின் யெரெவனுக்கு(Yerevan.) மேற்கே சுமார் 35 கிமீ தொலைவில் அரரத் சமவெளியில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான தொல்பொருள் தளங்களில் ஒன்றான மெட்சாமோரில்(Metsamor) அகழ்வாராய்ச்சியின் போது, போலந்து மற்றும் ஆர்மீனிய விஞ்ஞானிகளைக் கொண்ட தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு இரண்டு எலும்புக்கூடுகளுடன் (ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்) “தங்கக் கல்லறை” ஒன்றைக் கண்டுபிடித்தது.
இந்த கல்லறை எகிப்தை ஆட்சி செய்த இரண்டாம் ராமேசஸ் காலத்தது. 1965 ஆம் ஆண்டு முதல் மெட்ஸ்மோர் பகுதியில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் தங்க நெக்லஸ்கள் மற்றும் சிங்கங்களின் சித்தரிப்புகளுடன் கூடிய கில்டட் பெல்ட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Kidhours – Golden Tomb
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.