Thursday, January 23, 2025
Homeசிறுவர் செய்திகள்இந்தியாவில் காளானில் இருந்து தங்கம் Gold from Mushroom

இந்தியாவில் காளானில் இருந்து தங்கம் Gold from Mushroom

- Advertisement -

Gold from Mushroom  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

காட்டு வகை காளான்களில் இருந்து தொகுக்கப்பட்ட தங்க நானோ துகள்களின் ஆதாரங்களை (Gold Nanoparticles) கோவாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

டாக்டர் சுஜாதா டபோல்கர் (Dr. Sujata Dabolkar) மற்றும் டாக்டர் நந்தகுமார் கமத் (Dr. Nandkumar Kamat) ஆகிய இரு ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளனர்.

- Advertisement -

இரண்டு ஆராய்ச்சியாளர்களும் தங்க நானோ துகள்களை உருவாக்க ‘ரோன் ஓல்மி’ என்றும் அழைக்கப்படும் டெர்மிடோமைசஸ் இனத்தின் காளான்களை ஆய்வு செய்துள்ளனர்.டெர்மிடோமைசஸ் ஹெய்மி பெல்லட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் AuNP களின் உயிரியக்கவியல் மற்றும் குணாதிசயம் என்ற தலைப்பில், டெய்லர் மற்றும் பிரான்சிஸ் ஆகியோரால் புவி நுண்ணுயிரியல் இதழில் சமீபத்தில் இந்த ஆராய்ச்சி வெளியிடப்பட்டது.

- Advertisement -

மேலும், இந்த முறை, பாரம்பரிய முறைகளை விட சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் கருதப்படுகிறது. இவை, புற்றுநோய் சிகிச்சை, மருந்து விநியோகம், சூரிய மின்கலங்கள், மற்றும் நீர் சுத்திகரிப்பு போன்ற பணிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்ட காளான் , “ரோன் ஓம்லி” (Roen Olmi) என அழைக்கப்படுவதோடு இது, டெர்மிடோமைசெஸ் (Termitomyces) என்ற காளான் குடும்பத்தைச் சேர்ந்தது.இந்த காளான்கள் மழைக்காலங்களில் கிடைப்பதோடு கோவாவில் மிகவும் பிரபலமான உணவுப் பொருளாகவும் காணப்படுகின்றது.

Gold from Mushroom  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Gold from Mushroom  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இந்த ஆய்வின் மூலம், கோவாவில் காணப்படும் காளான் வகைகளின் மருத்துவ மற்றும் தொழில்துறை முக்கியத்துவம் மேலும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தொழில்கள் மற்றும் உள்ளூர் சமூகங்கள் ஆகிய இரண்டிற்கும் பயனளிக்கும் வகையில், நகோயா நெறிமுறையின்படி, இந்த வளங்களைப் பாதுகாப்பதன் மற்றும் பொறுப்புடன் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Kidhours – Gold from Mushroom

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.