Indian World Record பொது அறிவு செய்திகள்
மக்கள் தொகையில் கடந்த 100 ஆண்டுகளாக உலகின் முதல் நாடாக இருந்த சீனாவை, இந்தியா முந்தியுள்ளது.
சீனாவில் மக்கள் தொகை குறைந்துள்ள நிலையில், தற்போது திருமண பதிவுகளின் எண்ணிக்கையும் சரிந்துள்ள நிலையில், இந்த மாற்றம் பதிவாகியுள்ளது.2022இல், கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக சீனாவின் மக்கள் தொகை 8.5 லட்சம் அளவுக்கு சரிந்து, 141.1 கோடியாக குறைந்தது.
அதே சமயத்தில் இந்தியாவின் மக்கள் தொகை 142 கோடியாக அதிகரித்துள்ளது.இந்நிலையில், சீனாவில் நடைபெறும் திருமணங்களின் மொத்த எண்ணிக்கை, 2022இல், 68.3 லட்சமாக, 2021இன் அளவை விட 8 லட்சம் அளவுக்கு குறைந்துள்ளதாக சீன உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக திருமண பதிவுகள் தொடர்ந்து சரிந்து வருவதாகவும், கொரோனா கால ஊரடங்குகளினால், திருமணங்களின் எண்ணிக்கை வெகுவாக சரிந்துள்ள தாகவும் கூறப்படுகிறது.
சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் கடந்த ஆண்டு 1,000 பேருக்கு 6.77 குழந்தைகளாகக் குறைந்துள்ளது. இது 2021இல் 7.52 ஆக இருந்தது.

சீனா மக்கள் தொகையை அதிகரிக்கச் செய்ய, திருமணங்களை ஊக்குவிக்கவும், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும், கடந்த மாதம் 20 நகரங்களில் புதிய திட்டங்களை தொடங்கியுள்ளது.அதன்படி, 3 குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சில மாகாணங்கள், இளம் புதுமணத் தம்பதிகளுக்கு ஊதியத்துடன் கூடிய திருமண விடுமுறை காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது.
சீனாவில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. இதே நிலை நீடிட்தால் 2050இல் சீன மக்கள் தொகை 131.3 கோடியாக குறைந்து, 2100இல் 80 கோடியாக வீழ்ச்சியடையும் என்று ஐ.நா ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.இதன் விளைவாக மனிதவளம் குறைந்து, உலகின் தொழில் கேந்திரமாக திகழும் சீனாவில் இருந்து, இந்தியா உள்ளிட்ட இதர நாடுகளுக்கு உற்பத்தி நிறுவனங்கள் இடம்பெயரும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
Kidhours – Indian World Record
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.