Tamil Kids News Ginners Record சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அமெரிக்காவைச் சேர்ந்த சமந்தா ரம்ஸ்டேல்(Samantha Rumsdale) எனும் 21 வயதான யுவதி, உலகின் மிகப் பெரிய வாயைக் கொண்டவராக காணப்படுகின்றார்.
இதற்காக அவர் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார். இந்த அங்கீகாரத்துடன் சமூக வலைத்தள பிரபலமாகவும் சமந்தா ரம்ஸ்டேல்(Samantha Rumsdale) விளங்குகிறார்.
32 லட்சம் பேர் அவரை சமூக வலைதளத்தில் பின்தொடர்கின்றனர். அண்மையில் அவர் பற்சிகிச்சைக்காக பற்சிகிச்சை நிலையமொன்றுக்கு சென்றார். மிகப் பெரிய வாயைக் கொண்ட சமந்தா(Samantha Rumsdale) தமது பற்சிகிச்சை நிலையத்துக்கு வருவதை அறிந்த ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
இதனால், அவர்கள் செங்கம்பளம் விரித்து சமந்தாவுக்கு (Samantha Rumsdale)வரவேற்று அளித்தனர்.
அவருக்கு சிகிச்சை அளிக்கும்போது, வாயை விரித்து வைத்திருப்பதற்காக பயன்படுத்தப்படும் சாதனம் தேவையேபடவில்லை என மருத்துவர் எல்க் சேயுங்(Elk Seung) தெரிவித்துள்ளார்.
பற்சிகிச்சை நிலையத்துக்கு சென்றபோது பிடிக்கப்பட்ட வீடியோவையும் டிக்டொக்கில் சமந்தா ரம்ஸ்டேல்(Samantha Rumsdale)வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ 27 லட்சம் தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சமந்தா ரம்ஸ்டேல்(Samantha Rumsdale) வாயை முழுமையாக திறந்தால் இரு உதடுகளுக்கும் இடையிலான இடைவெளி 6.56 சென்ரிமீற்றராக உள்ளது. அவரின் வாயை அகலமாக விரிக்கும் போது அதன் இரு முனைகளுக்கு இடையிலான நீளம் 10 சென்ரிமீற்றராக உள்ளது.
அமெரிக்காவின் கெனக்டிகட் மாநிலத்தைச் சேர்ந்த சமந்தா ரம்ஸ்டேல் சிறிய வயதிலிருந்தே பெரிய வாயைக் கொண்டிருந்தார். அவரின் குடும்பத்தில் வேறு எவருக்கும் இது போன்ற வாய் இல்லை.
பாடசாலையில் தனது பெரிய வாய் காரணமாக தான் கேலிக்கு ஆளானதாக சமந்தா கூறுகிறார். ஆரம்பத்தில் தனது பெரிய வாய் குறித்து தான் கவலையடைந்த போதிலும் பின்னர் தான் அதை ஏற்றுக்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
‘எனது வாய் காரணமாக நான் இந்தளவு பிரபலமாகுவேன் என நான் எண்ணியிருக் கவில்லை’ எனவும் சமந்தா ரம்ஸ்டேல்(Samantha Rumsdale) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
kidhours – Tamil Kids News Ginners Record , Tamil Kids News Ginners Record update
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.