Tamil Kids News Gas Shortage in Swiss சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஐரோப்பா முழுவதும் எரிவாயு பிரச்சினை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்த குளிர்காலத்தை எதிர்கொள்வதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள எரிவாயு தொடர்பான விதிகளை மீறுவோருக்கு சிறைத்தண்டனை வழங்க சுவிட்சர்லாந்து அரசு திட்டமிட்டுவருகிறது.

விதிகளை மீறுவோருக்கு அபராதங்களோ அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ வழங்கப்படலாம் என சுவிஸ் சர்வதேச செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய விதிகளின்படி, எரிவாயு மூலம் கட்டிடங்களை வெப்பப்படுத்தும் வசதி கொண்ட இடங்களில், அதிகபட்சம் 19 டிகிரி செல்சியஸ் வரைதான் வெப்பப்படுத்தவேண்டும்.
தண்ணீரை 60 டிகிரி செல்சியஸ் (140 டிகிரி பாரன்ஹீட்) வரை வெப்பப்படுத்தலாம். இதுபோன்ற விதிகளை மீறுவோருக்கு, குறைந்தபட்சம் தினசரி 30 சுவிஸ் ஃப்ராங்குகள் முதல், அதிகபட்சம் 3,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை அபராதம் விதிக்கப்படலாம் என பெடரல் நிதித்துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தன்போது குற்றவியல் நடவடிக்கைகளுக்கு பதிலாக, அபராதங்கள் விதிப்பது குறித்து ஆலோசிக்குமாறு பொலிஸ் அதிகாரிகள் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
kidhours – Tamil Kids News Gas Shortage in Swiss
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.