tamil kids latest news, tamil children’news siruvar seithigal
சீனாவின் ஷியான் நகரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் எரிவாயு குழாயில் உடைப்பு ஏற்பட்டு வெடித்ததால் 12 பேர் உயிரிழந்தனர்.
சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள ஷியான் நகரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் 13.06.2021 காலை 6.30 மணிக்கு எரிவாயு குழாய் உடைப்பு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் குடியிருப்பு கட்டிடத்தில் பெரும்பகுதி இடிந்தது. இந்த விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.மேலும் இடிபாடுகளில் சிக்கி 138 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 37 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

காயமடைந்தவர்களுக்கு செலுத்துவதற்காக ரத்த தானம் செய்ய முன்வருமாறு ஷியான் நகர மருத்துவமனைகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக அங்குள்ள உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை