Sunday, January 19, 2025
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஇரு நண்பர்களின் கின்னஸ் சாதனை Friends Guinness Records

இரு நண்பர்களின் கின்னஸ் சாதனை Friends Guinness Records

- Advertisement -

Friends Guinness Records  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் விதவிதமாக எத்தனையோ சாதனைகளை பார்த்திருக்கிறோம்.

ஆனால் சிலரின் சாதனைகள் வினோதமாகவும், விசித்திரமாகவும் இருக்கும்.

- Advertisement -

அப்படி ஒரு சாதனையை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நண்பர்கள் இருவர் நடாத்தியுள்ளனர்.

- Advertisement -

சிட்னியைச் சேர்ந்த ஹாரி கூரோஸ் (வயது 26) மற்றும் அவரது நண்பர் ஜேக் லாய்டர்டன் (வயது 26) ஆகியோர், 24 மணி நேரத்தில் 99 பார்களில் சென்று குடித்துள்ளனர்.

இதற்காக 1,500 அவுஸ்திரேலிய டாலர்கள் செலவு செய்துள்ளனர்.

இதன்மூலம் இவர்கள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்.

முந்தைய சாதனை கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஹென்றிச் டி வில்லியர்ஸ் என்பவர் ஒரே நாளில் 78 பார்களில் குடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

அதை ஹாரி கூரோஸ்- ஜேக் லாய்டர்டன் நண்பர்கள் முறியடித்திருப்பதாக கின்னஸ் உலக சாதனை அமைப்பு தெரிவித்துள்ளது.

Friends Guinness Records  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Friends Guinness Records  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இப்படி ஒரு உலக சாதனை படைப்பதற்கு, இரண்டு முக்கிய காரணங்களை ஹாரி கூரோஸ்- ஜேக் லாய்டர்டன் கூறி உள்ளனர்.

நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடிய அரியவகை நோயான மல்டிபிள் ஸ்களீரோசிஸ் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுவரும் எம் எஸ் அவுஸ்திரேலியா என்ற அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காகவும், சிட்னியில் கொரோனா பரவல் காரணமாக அழிந்துபோன இரவு நேர கேளிக்கை வாழ்க்கைக்கு புத்துயிர் அளிக்கவும் இந்த முயற்சியை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 24 மணி நேரத்தில் 100 பார்களுக்கு செல்ல இருவரும் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், 99வது பாருக்கு சென்று குடித்தபோது 100வது பார் என தவறாக கணக்கிட்டு, தங்கள் முயற்சியை நிறுத்தியிருக்கிறார்கள்

 

Kidhours – Friends Guinness Records

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்m

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.