Frequent Earthquake உலக காலநிலை செய்திகள்
ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. ரிக்டர் அளவு குறைவாக உள்ளதால் பெரியதாகத் தாக்கம் ஏற்படவில்லை. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் நேற்று மற்றும் இன்று என்று தொடர்ந்து மூன்று முறை நிலநடுக்கம் தாக்கியுள்ளது. நேற்று காலை 08.23 மணிக்கு ஆப்கானிஸ்தானில் ஃபைசாபாத் பகுதிக்கு 86 கிலோ மீட்டர் தொலைவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இன்று காலை 04.45 மணிக்கு ஃபைசாபாத் பகுதிக்கு 103 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவாகியுள்ளது. தற்போது, மீண்டும் இன்று காலை 09.07 மணியளவில் அதே பகுதியில் 104 கிலோ மீட்டர் தொலைவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நில அதிர்வுகளைக் கண்காணிக்கும் இந்திய நில அதிர்வுக்கான தேசிய மையம் இத்தகவலை வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து, நேற்று அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தொடர்ந்து 4.1 மற்றும் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
Kidhours – Frequent Earthquake
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.