Tamil Kids News France Crisis சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ரஷ்யா – உக்ரேன் போர் காரணமாக பிரான்ஸில் உற்பத்திச் சங்கிலிகளில் பல செயலிழப்புகளுக்கு வழிவகுத்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடுகு மற்றும் சூரியகாந்தி எண்ணெய் பல மாதங்களாக சுப்பர் மார்க்கெட் அலமாரிகளில் பற்றாக்குறையை ஏற்படுத்தி வரும் நிலையில் அடுத்த வாரங்களில் மற்ற சில முக்கிய உணவு பொருட்களும் முடிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸில் ஏற்படும் பற்றாக்குறை தொடர்பில் 60 மில்லியன் மக்களுக்கு எச்சரிக்கை சமிஞ்சை வெளியிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, பட்டர், நெய் மற்றும் பால் தயாரிப்புகள் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
விலங்குகளுக்கு உரிய தீவினம் கிடைக்காமையினால் கொழுப்பு மற்றும் போதுமான பால் கிடைப்பதில்லை என தெரியவந்துள்ளது. இந்த நிலையில் விலைவாசி உயர்வு, தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
கோடை காலத்தில் உருளைக்கிழங்கு உற்பத்திக்கு பேரழிவு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக கிழங்குகளின் வளர்ச்சி குறைவடைந்துள்ளது.
ஒகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் அறுவடைகள் தொடங்கும் போது, தொழில் விளைச்சலில் சராசரியாக 50 சதவீத வீழ்ச்சி ஏற்படும். பத்து உற்பத்தியாளர்களில் ஏழு பேர் பாதிக்கப்படுவார்கள் என குறிப்பிடப்படுகின்றது.
பிரான்ஸில் ஒவ்வொரு ஆண்டும் 45,000 தொன் தேன் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் இந்த ஆண்டு தேனீ வளர்ப்பவர்கள் கவலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர்களின் உற்பத்திக்கு பேரழிவு தரக்கூடியதாக உள்ளதென குறிப்பிட்டுள்ளனர்.
kidhours- Tamil Kids News France Crisis
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.