Tamil Kids News France Climate உலக காலநிலை
தெற்கு பிரான்சில் ஏற்பட்ட பாரிய காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டுவர 900க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் தெற்கு கார்ட் பிராந்தியத்தில் வியாழக்கிழமை மதியத்திற்கு மேல் ஏற்பட்ட காட்டுத்தீயானது, முதல் 24 மணி நேரத்தில் 1,500 ஏக்கரை அழித்ததாக கூறப்படுகிறது.

குறித்த பாரிய காட்டுத்தீயானது முதன்முதலில் போர்டெசாக் கிராமத்திற்கு அருகில் பதிவாகி, அருகிலுள்ள பெஸ்ஸெஜஸ் மற்றும் பிற குடியிருப்புகளில் இருந்து மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மாண்ட்பெல்லியர் மற்றும் மத்திய தரைக்கடல் கடற்கரைக்கு வடக்கே சுமார் 55 மைல் தொலைவில் உள்ள அப்பகுதியில் உள்ள விடுமுறை இல்லங்கள் மற்றும் உணவகங்களில் சுமார் 100 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அரசு அலுவலகம் கூறியுள்ளது.இதனிடையே தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு 12 விமானங்கள் மற்றும் 2 ஹெலிகொப்டர்களும் தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
தென்கிழக்கு பிரான்ஸில் இந்த ஆண்டு வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், காட்டுத்தீ அபாயம் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் பருவம் தவறிய வெப்ப அலையின் போது, மத்திய தரைக்கடல் துறைமுக நகரமான மார்செய்லிக்கு அருகில் உள்ள இராணுவ பீரங்கி பயிற்சித் தளத்தில் ஷெல் தாக்குதலால் ஏற்பட்ட தீயில் சுமார் 600 ஹெக்டேர் எரிந்து சேதமானது குறிப்பிடத்தக்கது.
kidhours – Tamil Kids News France
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.