France Building Collapse சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பிரான்ஸில் மார்ச்சே நகரத்தில் நள்ளிரவில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து, தீ விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருவதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பகுதியில் தீவிபத்தும் ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணிகளில் சிரமத்தை எதிர்நோக்குவதாக மீட்பு பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நள்ளிரவு 01.00 மணியளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் எத்தனை பேர் சிக்கியுள்ளார்கள் என்பதை அறியமுடியவில்லை எனவும், உயிரிழப்பு அல்லது சேத விபரங்களை மதிப்பிட முடியவில்லை என்றும் மீட்பு பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்
Kidhours- France Building Collapse
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.