Forest Fire in US சிறுவர்களுக்கான உலக செய்திகள்
வட அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வரும் நிலையில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
அதாவது பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருவதுடன், காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீயால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் தீக்கிரையாகி வருகின்றன. காட்டுத்தீ காரணமாக சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயால் சுமார் 10 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு முற்றிலும் நாசமாகியுள்ளது.
அத்துடன் , 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த அநர்த்தத்தினால் 10,000க்கும் அதிகமான வீடுகள், கட்டிடங்கள் மற்றும் பிற கட்டமைப்புகள் எரித்துள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Kidhours – Forest Fire in US
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.