Forest Fire சிறுவர்களுக்கான உலக செய்திகள்
தென் அமெரிக்க நாடான சிலியில், கொளுந்துவிட்டு எரிந்துவரும் காட்டுத் தீயில் 700 ஹெக்டேர் வனப்பகுதி தீக்கிரையானதுடன், அருகில் இருந்த ஏராளமான கட்டிடங்களும் எரிந்து சாம்பலாகின.
சிலான் நகருக்கு அருகே வனப்பகுதியில் பற்றிய காட்டுத் தீ வேகமாக நகர்ந்து சிலான், சிலான் விஜோ மற்றும் குய்ரிஹூ உள்ளிட்ட பகுதிகளிலுள்ள குடியிருப்புகளையும் சூழ்ந்துள்ளது.

இதன்போது வீடுகளை இழந்த மக்கள் முகாம் வாசிகளாக மாறினர். வெப்ப அலையால் அதி தீவிரமாகப் பரவிவரும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
Kidhours – Forest Fire
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.