Food bank சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கனடாவில் இலவச உணவை நாடுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உணவு வங்கிகளை அணுகுவது எப்படி, உணவு வங்கிகளுக்கு நன்கொடை செலுத்துவது எப்படி என்பது போன்ற கேள்விகளும் பலரிடம் உள்ளன.
அவற்றிற்கு பதிலளிப்பதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்…
உணவு வங்கிகளை அணுகுவது எப்படி?
உங்களுக்கு அருகிலுள்ள உணவு வங்கியை நாட விரும்புபவராக நீங்கள் இருந்தால் கீழ்க்கண்ட இணைப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
உணவு வங்கி என்பது என்ன?
தேவையிலிருப்போருக்கு உதவுவதற்காகவே வடிவமைக்கப்பட்டவைதான் உணவு வங்கிகள். ஆகவே, அவை இலவச உணவுப் பொருட்களை வழங்குகின்றன.
ஆனாலும், யார் இந்த உணவு வங்கிகளிலிருந்து உதவி பெறலாம் என்பது ஒவ்வொரு உணவு வங்கியைப் பொருத்தும் மாறுபடலாம்.
உணவு வங்கிகளுக்கு வருவோர் அடையாள அட்டை எதையாவது கொண்டுவரவேண்டுமா?
உணவு வங்கியில், அலுவலர் ஒருவர் உங்களிடம் உங்கள் பெயர், முகவரி மற்றும் உங்கள் வருவாய் குறித்த சில கேள்விகளைக் கேட்கக்கூடும்.
ஆகவே, அரசு அடையாள அட்டை, முகவரிச் சான்று போன்ற சில விடயங்களை உங்கலுடன் கொண்டு செல்வது நல்லது.
உணவு வங்கியில் என்ன கிடைக்கும்?
பொதுவாக உணவு வங்கியில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், பச்சைக் காய்கறிகள், பழவகைகள், பால் பொருட்கள் ஆகியவை கிடைக்கும். என்றாலும், நீங்கள் உணவு வங்கிக்குச் செல்லும்போது இவை எல்லாமே அங்கு இருக்கும் என கூறமுடியாது.
சில உணவு வங்கிகள் குறிப்பிட்ட நாட்களுக்குத் தேவையான உணவு வகைகளை பொட்டலமாக கொடுப்பதுண்டு.
சில இடங்களில் பல்பொருள் அங்காடிகளில் இருப்பது போல, நீங்களே சென்று உங்கள் வீட்டிலுள்ள உறுப்பினர்களின் அடிப்படையில் உங்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
பொதுவாக, ஏழு நாட்கள் வரை கெட்டுப்போகாத உணவுகள் கிடைக்கும் என்றாலும், இது சற்றே முன்பின் மாறுபடலாம்.
உணவு வங்கிக்கு நன்கொடை வழங்குவது எப்படி?
உணவு வங்கிகளுக்கு பணமாகவும் நன்கொடை கொடுக்கலாம், உணவுப்பொருட்களையும் நன்கொடையாக செலுத்தலாம்.
பணம் செலுத்துவர்கள் ஒன்லைன் மூலமாகவே செலுத்தமுடியும். உணவுப்பொருட்களை நன்கொடையாக வழங்குவோர் நேரில் சென்று வழங்கவேண்டும்.
எந்த வகையான உணவுப் பொருட்களை நன்கொடையாக வழங்கலாம்?
இதுவும் ஒவ்வொரு உணவு வங்கியையும் பொருத்தது. ஆகவே, நன்கொடை வழங்குவதற்கு முன் அந்த உணவு வங்கிக்கு தொலைபேசி செய்து அவர்களிடமே இது குறித்துக் கேட்டுக்கொள்வது நல்லது.
Kidhours – Food bank
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.