Tamil Kids News Flying Bike சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகின் முதல் பறக்கும் பைக்கை அமெரிக்க வாகன கண்காட்சியில் ஜப்பானிய நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தி உள்ளது.
சாலையில் போக்குவரத்து நெரிசலா கவலை வேண்டாம், பறந்து போலாம் உலகின் முதல் பறக்கும் பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஏர்வின்ஸ் உருவாக்கியுள்ள இந்த பறக்கும் பைக் டெட்ராய்ட் பகுதியில் நடைபெறும் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ட்ரோன் போன்ற வடிவமைப்பிலான பறக்கும் தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பைக் தொடர்ந்து 40 நிமிடம் வரை பறக்கும் திறனும், மணிக்கு 99 புள்ளி 77 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறனும் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப்பானில் ஏற்கெனவே இந்த பைக்கின் விற்பனை தொடங்கி விட்டதாகவும், இந்த பைக்கின் சிறிய வெர்சன், 2023ம் ஆண்டு அமெரிக்காவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாகவும், அதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 6 கோடியே 20 லட்சம் ரூபாய் என்றும் தெரியவந்துள்ளது.
kidhours – Tamil Kids News Flying Bike
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.