Tamil Kids News Flood Disaster சிறுவர்களுக்கான உலக செய்திகள்
வெனிசுலா நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இதனால் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் சிக்கி 20 பேர் இதுவரையில் மரணமடைந்துள்ளனர்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் மரிடா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழை காரணமாக மாகாணத்தின் பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மரிடா மாகாணத்தில் 1,200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
நகரின் பல்வேறு இடங்களில் சாலை, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மரிடா மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 17 பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டும், நிலச்சரிவில் சிக்கியும் மாயமாகியுள்ளனர். இதையடுத்து காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
kidhours – Tamil Kids News Flood Disaster
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.