Tamil Kids News Flood சிறுவர்களுக்கான உலக செய்திகள்
எத்தியோப்பியாவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் நேற்று திடீரென கனமழை பெய்தது. குறிப்பாக, அந்நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் பெய்த கனமழையால் நகரின் பல்வேறூ பகுதிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வெள்ளத்தால் பல வீடுகள் இடிந்து சேதமடைந்தனர். கார்கள் அடித்து செல்லப்பட்டன. இந்நிலையில், அடிஸ் அபாபாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளத்தில் மேலும் சிலர் அடித்து செல்லப்பட்டுள்ளதால் அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
kidhours – Tamil Kids News Flood
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.