Flight Fire Accident சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அமெரிக்காவில் சுற்றுச்சூழல் ஆலோசனை நிறுவனத்துக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
ஓஹியோ மாகாணத்தில் உலோக ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்து சம்பவத்துக்கு ஆலோசனை அளிக்கச் சென்ற நார்த் லிட்டில் ராக்கை தளமாகக் கொண்ட சுற்றுச்சூழல் ஆலோசனை நிறுவன ஊழியர்கள் சிறிய ரக விமானத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அந்நிலையில் திடீரென இடியுடன் கூடிய மழைபெய்து பலத்த காற்றும் வீசியதால், நடுவானில் விமானம் தீப்பற்றி எரிந்து விழுந்தது. இதில், விமானி உட்பட ஐந்து பேரும் உயிரிழந்தனர்.
Kidhours – Flight Fire Accident
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.