Monday, January 27, 2025
Homeசிறுவர் செய்திகள்உலகை தன்னந்தனியாக சுற்றிவந்து சிறுவன் சாதனை Tamil Kids News Flight # World Best...

உலகை தன்னந்தனியாக சுற்றிவந்து சிறுவன் சாதனை Tamil Kids News Flight # World Best Tamil

- Advertisement -

Tamil Kids News Flight  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

உலகை சுற்றி வருவது என்பது பலரது நீண்ட நாள்கனவாக இருக்கும்.ஆனால், இந்த கனவை மிக சிறிய வயதிலேயே ஒருவர் செய்து காட்டியுள்ளார்.

17 வயது இளைஞரான மேக்ரதர் ஃபோர்ட் என்பவர்தான் இந்த உலக சாதனையை செய்துள்ளார்.இவருக்கு விமானமும் ஓட்ட தெரியும் என்பது தான் அதில் சிறப்பான விஷயம்.

- Advertisement -
Tamil Kids News Flight  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Kids News Flight  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இவரது உலகை சுற்றும் பயணம் ஐந்து மாதங்களுக்கு முன்பு தொடங்கியது, இவர் ஒரு சிறிய விமானத்தில் உலகம் முழுவதும் தனியாக பறந்து சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

பெல்ஜியம் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் இரட்டைக் குடியுரிமை பெற்ற மேக்ரூதர்ஃபோர்ட், பல்கேரியாவின் தலை நகரான சோபியாவின் மேற்கு விமான நிலைய ஓடுபாதையில் தனது சாதனையை முடித்துள்ளார்.

ரதர்ஃபோர்ட் தனது இளம் வயதில் தனியாகப் பறந்து உலகைச் சுற்றி வந்ததோடு மட்டுமல்லாமல், சிறுவயதிலேயே மைக்ரோலைட் விமானத்தில் உலகைச் சுற்றிவந்த வரும்ஆவார்.

இந்த சாதனை குறித்து பேசிய அவர், எனது இந்த பயணம் ஏராளமான இளைஞர்கள் தங்களின் கனவுகளை தொடர ஊக்கமளிக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் “உங்கள் கனவுகளைப் பின்பற்றுங்கள்,

நீங்கள் எவ்வளவு வயதானவராக இருந்தாலும், கடினமாக உழைத்து, உங்கள் இலக்குகளை அடையமுன்னோக்கிச் செல்லுங்கள்,” என்று அவர் இந்த சாதனையை முடிக்கும் போது கூறினார்.

இவரது சகோதரியான, 19 வயதுஜாரா இது போன்ற உலக சாதனை ஒன்றை முடித்துள்ளார்.
மார்ச் 23 அன்று தொடங்கிய ரூதர்ஃபோர்ட்டின் பயணம், ஐந்து கண்டங்களில் உள்ள 52 நாடுகளை கடந்துள்ளது.

விமானிகளின் குடும்பத்தில் பிறந்த ரூதர்ஃபோர்ட் 2020இல்  விமானத்தை ஓட்டுவதற்கான உரிமத்தைபெற்றார்.அவருக்கு அப்போது 15 வயதாக இருந்தது.வெப்ஹோஸ்டிங் நிறுவனமான ICDSoft, தான் இவருக்கு விமானத்தை கடனாக வழங்கியுள்ளது.

உலகம் முழுவதும் பறக்கும் அவரதுதனிப் பயணம் பல்கேரியாவில் தொடங்கியது. அவரது சகோதரியைப்போலவே, ரூதர்ஃபோர்ட் சிறப்பாக பயணம் செய்து சாதனையை படைத்துள்ளார்.

இவர் பயணம் செய்த விமானமானது உலகின் அதிவேக அல்ட்ராலைட் விமானங்களில் ஒன்றாகும், இது மணிக்கு 300 கிமீ வேகத்தை எட்டகூடியது.

இதில் பொதுவாக இரண்டு இருக்கைகள் இருக்கும்.ஆனால், இதில் இரண்டாவது இருக்கைக்கு பதிலாக கூடுதல் எரிபொருள் டேங்குகள் அவரது நீண்ட பயணத்திற்காக மாற்றியமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் மூன்று மாதங்களுக்குள் பயணம் செய்ய திட்டமிடப்பட்டது.

ஆனால், பருவமழை, மணல் புயல் மற்றும் கடுமையான வெப்பம் உட்பட, எதிர்பாராத பலதடைகள் அவரது வழியில் இருந்ததால் பயணம் நீண்ட காலம் எடுத்து கொண்டது. இவரது விமானம் ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடா பகுதி வழியாக இந்தியா, சீனா, தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு பயணித்தது.

ரூதர்ஃபோர்ட்டை வரவேற்கவும் அவரது சாதனைகளைக் கொண்டாடவும் ஏராளமான மக்கள் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.அவரது தந்தை சாம்ரூதர்ஃபோர்ட், தனது குழந்தைகளின் சாதனைகள் குறித்து மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருப்பதாகக் கூறினார்.

இது போன்ற நிகழ்வு குழந்தைகள் தங்கள் கனவுகளைப் பின்பற்றுவதற்கும், பெற்றோர்கள் அவர்களின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் ஊக்கமளிப்பதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஜாராரூதர்ஃபோர்ட், அவரது பயணத்தின் போது தனது இளையசகோதரருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகக் கூறினார்.”எனது தம்பி விமானத்தில் பறக்கும் போது, ​​​​நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் அவருக்கு உதவவும் முயற்சித்தேன்” என்றார்.

ரூதர்ஃபோர்ட்டின் இந்த சாதனை இன்றுபல இளையவயதினரால் கொண்டாடப்பட்டுவருகிறது.

 

kidhours – Tamil Kids News Flight , Tamil Kids News Flight world record

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.